PHOTOS

Flat Stomach வேண்டுமா? வயிற்றுக் கொழுப்பை நீக்க உதவும் எளிய tips இதோ

தியில் சேரும் கொழுப்பு இந்நாட்களில் மனிதர்களை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் பலர் பலவித சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். நீங்களும் வயிற்ற...

Advertisement
1/5
கார்டியோ உடற்பயிற்சி நன்மை பயக்கும்
கார்டியோ உடற்பயிற்சி நன்மை பயக்கும்

கார்டியோ உடற்பயிற்சி முக்கியமானது. ஆனால் இந்த பயிற்சிகளை பாரம்பரிய வழியில்தான் செய்ய வேண்டும் என அவசியமில்லை. உங்களுக்கு ஜாகிங் செல்ல விருப்பவில்லை என்றால், ஹை இண்டென்சிடி இண்டர்வல் டிரெய்னிங்கை (HIIT) முயற்சிக்கலாம். உங்கள் உடலுக்கும், வாழ்க்கை முறைக்கும் ஒத்துப்போகும் கார்டியோ உடற்பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும்.

2/5
AB Workouts
AB Workouts

AB Workouts அதாவது வயிறு மற்றும் அதற்கு மேலுள்ள பகுதிகளுக்கான பயிற்சிகள் வயிற்று கொழுப்பை இழக்க உங்களுக்கு உதவாது. ஆனால் அவை தசையை உருவாக்கி திடமாக்கும். ஆனால் நீங்கள் Ab muscles உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருதால், Ab workouts-ஐ கைவிட வேண்டாம். வட கரோலினாவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தின் 2012 ஆய்வில், மெலிந்த தசையைப் பெறுவதற்கு வலிமை பயிற்சி சிறந்தது என்றாலும், ஏரோபிக் பயிற்சி (கார்டியோ) உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது கண்டறியப்பட்டது. ஜிம்மில் ஏப்ஸ் உருவாக்கப்படுகின்றன. ஆனால் எடை குறைக்க, கார்டியோ பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

3/5
எடை இழப்பு உணவைப் பொறுத்தது
எடை இழப்பு உணவைப் பொறுத்தது

எடை இழப்பு முற்றிலும் உணவைப் பொறுத்தது. ஒரு நல்ல உணவு முறையைப் பின்பற்றினால், நீங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும். வயிற்று கொழுப்பைக் குறைக்க, உங்களுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 

4/5
எடையை குறைக்கும் மந்திரம் சமையலறையில் உள்ளது
எடையை குறைக்கும் மந்திரம் சமையலறையில் உள்ளது

‘Abs are made in the Kitchen’ என்று ஒரு பழமொழியும் உண்டு. அதாவது சிக்ஸ் பேக்கை உருவாக்க உடற்பயிற்சியை விட உணவு முக்கியமானது என்பதே இதன் பொருளாகும். ஈரானில் உள்ள தெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2015 ஆம் ஆண்டு, 12 வாரங்களுக்கு அதிக எடை கொண்ட பருமனான 40 பெண்கள் மீது ஆய்வு ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இவர்களில் ஒரு குழுவிற்கு சத்தான உணவு மட்டும் வழங்கப்பட்டது. மற்றொறு குழுவிற்கு உணவு மற்றும் வயிற்று பயிற்சி அளிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் இரு குழுக்களில் இருந்தவர்களும் தங்கள் எடையை இழந்துள்ளார்கள் என்பதும், இழந்த எடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என்பதும் தெரிய வந்தது.

5/5
உங்களுக்கு ஏற்ற உணவை தேர்வு செய்யுங்கள்
உங்களுக்கு ஏற்ற உணவை தேர்வு செய்யுங்கள்

உடனடியாக உடல் எடையை குறைக்கக்கூடிய சரியான உணவு என்று எதுவும் இல்லை. உணவில் பெரும்பாலானவை உங்களுக்கு உடல் ரீதியாக வேலை செய்யக்கூடியவைதான். உங்களுக்கு உளவியல் ரீதியாக வேலை செய்யும் உணவை நீங்கள் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். 





Read More