PHOTOS

8வது ஊதியக்குழுவுடன் UPS இணைந்தால் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் இருக்கும்: கணக்கீடு இதோ

்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். இதனுடன், 8வது ஊதியக் குழுவையும் ஜனவரி 1, 2026 முதல் மத்திய அரசு...

Advertisement
1/11
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

இந்திய அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இது ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். இதனுடன், 8வது ஊதியக் குழுவையும் ஜனவரி 1, 2026 முதல் மத்திய அரசு அமல்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது. புதிய சம்பள கமிஷன் மற்றும் புதிய ஓய்வூதிய முறையால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய கணக்கீடுகளில் பெரிய மாற்றம் இருக்கக்கூடும். 

2/11
8வது ஊதியக் குழு
8வது ஊதியக் குழு

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மட்டுமின்றி அவர்களது ஓய்வூதியத்திலும் பெரிய மாற்றங்கள் காணப்படும். 8வது ஊதியக்குழுவின், லெவல் 1 ஊழியர்களின் ஊதியம் ரூ. 34,560 ஆகவும், லெவல் 18 நிலையில் உள்ள ஊழியர்களின் ஊதியம் ரூ. 4.8 லட்சமாகவும் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. 8வது ஊதியக்கமிஷனின் தாக்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் (UPS) எப்படி இருக்கும் என இங்கே காணலாம். 

3/11
தேசிய ஓய்வூதிய அமைப்பு
தேசிய ஓய்வூதிய அமைப்பு

இந்திய அரசு 2004 ஆம் ஆண்டு தேசிய ஓய்வூதிய அமைப்பை அமல்படுத்தியது. ஆனால், இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான நன்மைகள் கிடைக்காததால், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) கொண்டு வர வேண்டும் என ஊழியர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. OPS -இல், ஓய்வூதியத்திற்காக ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து எந்தப் பங்களிப்பும் செய்ய வேண்டியதில்லை. NPS இல், அவர்கள் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தை செலுத்த வேண்டும். இதில், 14 சதவீத பங்களிப்பை அரசு வழங்குகிறது. இப்போது UPS -இல், ஊழியர்களுக்கு கடைசி 12 மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

4/11
7வது ஊதியக்குழு
7வது ஊதியக்குழு

அடுத்த நிதியாண்டு முதல் யுபிஎஸ் (UPS) அமல்படுத்தப்படும். இதில் சேரும் ஊழியர்களுக்கு 2029 முதல் அதன் பலன்கள் கிடைக்கத்டுவங்கும். ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாகப் பெற அவர்கள் 25 ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பல ஆண்டுகள் பணியின் அடிப்படையில் யுபிஎஸ் சலுகை வழங்கப்படும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10,000 பெற, ஊழியர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும். மறுபுறம், 7வது ஊதியக் குழுவின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழுவை அரசு அமல்படுத்துகிறது

5/11
8வது ஊதியக் குழு
8வது ஊதியக் குழு

2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமலுக்கு வரக்கூடும் என நம்பப்படுகின்றது. அப்படி நடந்தால், அதில் அரசு ஃபிட்மென்ட் ஃபாக்ட்ரை (Fitment Factor) 1.92 ஆக உயர்த்தலாம் என்று பல ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறைந்தபட்ச சம்பளம் தற்போதைய ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.34,560 ஆக உயரக்கூடும். இது தவிர, அதிகபட்ச சம்பளமும் ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக உயரும்.

6/11
அகவிலைப்படி
அகவிலைப்படி

இது தொடர்பாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி, 2004 இல் பணியமர்த்தப்பட்டவர்களின் முதல் பேட்ச் ஊழியர்கள் 2029 க்குள் 25 வருட ஓய்வு கால அளவை நிறைவு செய்வார்கள். 8வது ஊதியக் குழுவை சரியான நேரத்தில் அமல்படுத்தினால், 4 சதவீத அகவிலைப்படி (Dearness Allowance) படி, 2029 க்குள் அவர்களின் டிஏ (DA), அடிப்படை சம்பளத்தில் 20 சதவீதமாக இருக்கும். அந்த நிலையில், ரூ.34,560 சம்பளத்தில் 20 சதவீத டிஏ ரூ.6,912 ஆகவும், அவர்களது ஓய்வூதியம் ரூ.20,736 ஆகவும் இருக்கும். அதேபோல், ரூ.4.8 லட்சம் சம்பளத்தில், டிஏ ரூ.96,000 ஆகவும், ஓய்வூதியம் (Pension) ரூ.2,88,000 ஆகவும் இருக்கும்.

7/11
UPS
UPS

UPS மூலம் பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்கள் ஒரு நிலையான ஓய்வூதியத்தைப் பெறலாம். அது ஓய்வுக்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள  ஊழியர்களுக்கு மட்டுமே இந்த நிலையான ஓய்வூதியம் கிடைக்கும். ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றால், அவருக்கு நிலையான குறைந்தபட்ச ஓய்வூதியமாக 10,000 ரூபாய் கிடைக்கும். UPS திட்டத்தின் கீழ்  உத்தரவாதமான குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும். இந்த ஓய்வூதியம் ஒரு ஊழியர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும்.

8/11
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

ஒரு கணக்கீட்டின் படி, 8வது ஊதியக் குழுவில் ஊழியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக மாற வாய்ப்புள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.34,560 ஆகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.17,280 ஆகவும் உயரலாம். இதனால் சுமார் 44% ஊதிய உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

9/11
ஃபிட்மென்ட் ஃபாக்டர்
ஃபிட்மென்ட் ஃபாக்டர்

6வது ஊதியக் குழுவில் இருந்து 7வது ஊதியக் குழுவுக்கு மாறியபோது, ஊழியர் சங்கம் சம்பள திருத்தத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசாங்கம் அதை 2.57 ஆகவே வைத்தது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7000ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது தவிர, குறைந்தபட்ச ஓய்வூதியமும் ரூ.3500ல் இருந்து ரூ.9000 ஆக உயர்ந்தது. பணிபுரியும் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2.50 லட்சமாகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1.25 லட்சமாகவும் மாறியது.  

10/11
ஊதிய உயர்வு
ஊதிய உயர்வு

8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், பிற கொடுப்பனவுகளிலும் (Allowances) மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரும் நிவாரணத்தை அளிக்கும்.  இதனால் ஊழியர்களுக்கு அதிக அளவு சம்பள உயர்வு கிடைக்க வயப்புள்ளது. 

11/11
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.





Read More