PHOTOS

மத்திய அரசு ஊழியர்களுக்கு 44% ஊதிய உயர்வு.... 8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்?

ு 8வது ஊதியக்குழுவை எப்போது அமல்படுத்தும்? இது குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? இவற்றை பற்றிய சமீ...

Advertisement
1/10
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

நாடு முழுதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் தற்போது 8வது ஊதியக்குழு பற்றிய விவாதம்தான் முக்கிய விஷயமாக உள்ளது. மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை எப்போது அமல்படுத்தும்? இது குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? இவற்றை பற்றிய சமீபத்திய அப்டேட்களை இந்த பதிவில் காணலாம்.

2/10
8வது ஊதியக் குழு
8வது ஊதியக் குழு

8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், அதனால் மத்திய அரசு ஊழியர்களின் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் (Pension) ஆகியவற்றில் நல்ல ஏற்றம் காணப்படும். இதன் காரணமாக விரைவாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டு மத்திய அரசு இதை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

3/10
புதிய ஊதியக்குழு
புதிய ஊதியக்குழு

10 ஆண்டுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படுவது வழக்கம். 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், அடுத்த ஊதியக்குழுவான 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேண்டும். ஊதியக்குழுக்களை அமல்படுத்த 1 1/2 முதல் 2 ஆண்டுகள் ஆகும். ஆகையால் இப்போது 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வந்தால், அது 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர சரியாக இருக்கும்.

4/10
ஊதிய உயர்வு
ஊதிய உயர்வு

8வது ஊதியக் குழுவை அமைக்கும் போது, ​​ஊழியர்களின் முன்மொழிவுகளை மத்திய அரசு பரிசீலித்து, 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமைக்கும் வகையில், 8வது ஊதியக்குழு தொடர்பான பரிந்துரைகளை, ஊழியர் அமைப்புகள், மத்திய அரசிடம் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. 

5/10
7வது ஊதியக்குழு
7வது ஊதியக்குழு

எனினும், அரசு இதுவரை இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. நாட்டில் இப்போதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு 8வது ஊதியக் குழுவின் நிலவரத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

6/10
டிவி சோமநாதன்
டிவி சோமநாதன்

எனினும், சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து கருத்து தெரிவித்த நிதிச்செயலர் டிவி சோமநாதன், 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டுதான் அமலுக்கு வர வேண்டும் என்றும் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறதென்றும் கூறினார். இது 8வது ஊதியக்குழுவை அமைக்க அரசாங்கம் முனைப்புடன் இருப்பதையே காட்டுகிறது.

7/10
சம்பளம்
சம்பளம்

ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், அதன் காரணமாக, ஊழியர்களின் சம்பளத்தில் நேரடி ஏற்றம் ஏற்படும். இதன் பின்னர் ரூ.18,000 அடிப்படை ஊதியம் உள்ளவர்களுக்கு இது ரூ.26,000 ஆக உயரும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உள்ளவர்களுக்கு சுமார் 44% ஊதிய உயர்வு கிடைக்கும்.

8/10
குறைந்தபட்ச சம்பளம்
குறைந்தபட்ச சம்பளம்

6வது ஊதியக் குழுவில் இருந்து 7வது ஊதியக் குழுவுக்கு மாறியபோது, ஊழியர் சங்கம் சம்பள திருத்தத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசாங்கம் அதை 2.57 ஆகவே வைத்தது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7000ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், மாத சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து ரூ. 26000 ஆக அதிகரிக்கும். 

9/10
ஓய்வூதியம்
ஓய்வூதியம்

7வது ஊதியக்குழுவில் குறைந்தபட்ச ஓய்வூதியமும் ரூ.3500ல் இருந்து ரூ.9000 ஆக உயர்ந்தது.  8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், ஓய்வூதியம் 9000 ரூபாயில் இருந்து 14000 ரூபாயாக உயரும்.

10/10
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.





Read More