PHOTOS

8வது ஊதியக்குழு: UPS-இன் கீழ் அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்தில் எக்கச்சக்க ஏற்றம்... கணக்கீடு இதோ

திர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழுவிற்குப் பிறகு, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைக் கருத்தில் கொண்டு, ரூ...

Advertisement
1/11
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

மத்திய அரசு சமீபத்தில் தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) மாற்றாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிவித்தது. ஏப்ரல் 1, 2025 முதல் இது அமல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். OPS, 2004 இல் NPS ஆல் மாற்றப்பட்டது.

2/11
என்பிஎஸ்
என்பிஎஸ்

என்பிஎஸ் -ஐ ரத்து செய்து ஓபிஎஸ் -ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என பல்வேறு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. OPS ஐப் போலவே, UPS -இலும் ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. ஓய்வுக்கு முந்தைய 12 மாதங்களின் அடிப்படை ஊதிய சராசரியில் 50% இதில் ஓய்வூதியமாக வழங்கப்படும். 

3/11
ஓய்வூதியம்
ஓய்வூதியம்

மேலும், இந்தத் திட்டம், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 -ஐ உறுதி செய்கிறது. ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால், வாழ்க்கைத் துணைக்கு 60% ஓய்வூதியம் கிடைக்கும். முழு ஓய்வூதியத்தை பெற தகுது பெற, பணியாளர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றுபவர்களுக்கு விகித அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும்.

4/11
7வது ஊதியக்குழு
7வது ஊதியக்குழு

7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ், தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியமான (Minimum Pension) ரூ. 9,000, குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான (Minimum Basic Salary) ரூ.18,000 உடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2026 இல் எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழுவிற்குப் பிறகு, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைக் கருத்தில் கொண்டு, ரூ.34,560 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5/11
குறைந்தபட்ச ஓய்வூதியம்
குறைந்தபட்ச ஓய்வூதியம்

அதன்படி, 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு குறைந்தபட்ச யுபிஎஸ் ஓய்வூதியம் ரூ.17,280 என கணிக்கப்படலாம் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறுகிறது. ஓய்வூதிய கணக்கீடு ஊழியரின் பணி ஓய்வுக்கு முந்தைய 12 மாதங்களில் சராசரி அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் செய்யப்படும். அகவிலைப்படி இணைப்பு அல்லது பிற மாற்றங்களின் காரணமாக குறைந்தபட்ச ஊதியத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் ஓய்வூதியத் தொகையும் மாறும்.

6/11
8வது ஊதியக்குழு
8வது ஊதியக்குழு

8வது ஊதியக் குழு, 2025 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வரக்கூடும் என வட்டாரங்கக் தெரிவிக்கின்றன. புதிய ஊதியக்குழு அமைக்கப்பட்டவுடன் சம்பள கட்டமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்படும். இது மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வுக்கு வழிவகுக்க்கும்.

7/11
ஊதிய உயர்வு
ஊதிய உயர்வு

இந்த சம்பள உயர்வு மாத சம்பளத்திலும் கணிசமாக அதிகரிப்பைக் கொண்டு வரும். லெவல் 1 ஊழியர்களுக்கு, 34% வரை சம்பள உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லெவல் 18 ஊழியர்களின் ஊதியம் 100% வரை உயர்வதைக் காணக்கூடும். முன்மொழியப்பட்ட மாற்றங்களின்படி, லெவல் 1 ஊழியர்களுக்கான சம்பளம் ரூ.34,560 ஆகவும், லெவல் 18 ஊழியர்களுக்கு ரூ.4.8 லட்சமாகவும் உயரலாம்.

8/11
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும். எனினும், அரசாங்கம் இன்னும் இதை பற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் எதையும் அறிவிக்கவில்லை.

9/11
அடிப்படை ஊதியம்
அடிப்படை ஊதியம்

அடிப்படை சம்பளம்: புதிய ஊதியக்குழுக்கள் வரும்போது அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம் செய்யப்படுகின்றது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படுக்கின்றது. 8வது உதியக்குழு வந்தால், ஓய்வூதியதாரர்களின் (Pensioners) ஓய்வூதியத்திலும் பெரிய அதிகரிப்பு இருக்கும்.

10/11
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

6வது ஊதியக் குழுவில் இருந்து 7வது ஊதியக் குழுவுக்கு மாறியபோது, ஊழியர் சங்கம் சம்பள திருத்தத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசாங்கம் அதை 2.57 ஆகவே வைத்தது. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.

11/11
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.





Read More