PHOTOS

டிஏ ஹைக், டிஏ அரியர், ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த தேதியில் மெகா அறிவிப்பு

ி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் அமலில் இருக்கும். அதாவது ஜூலை மாதம் முதலான அகவிலைப்படி அரியர் தொகை ஊழியர்கள் ...

Advertisement
1/11
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. நீண்ட நாட்களாக அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பல நல்ல செய்திகள் அவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கவுள்ளன. ஆகையால், இந்த பண்டிகை காலம் அவர்களுக்கு மிக சிறப்பாக அமையவுள்ளது. அந்த மகிழ்ச்சியான செய்திகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2/11
7வது ஊதியக்குழு
7வது ஊதியக்குழு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த 15 நாட்களில் முக்கிய அறிவிப்புகள் பல வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 2024  -க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் (Pensioners) காத்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரவுள்ளது.  இந்த செப்டம்பர் மாதத்தில், மத்திய அரசு தனது ஊழியர்களின் டிஏ உயர்வு அறிவிப்பை வெளியிடும் என நம்பப்படுகிறது.

3/11
ஏஐசிபிஐ குறியீடு
ஏஐசிபிஐ குறியீடு

ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி ஊயர்வு 3-4% இருக்கும் என கூறப்படுகின்றது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

4/11
டிஏ உயர்வு
டிஏ உயர்வு

அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால் ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 53% ஆக உயர்வும். டிஏ உயர்வு (DA Hike) 4% ஆக இருந்தால், இந்த உயர்வு 54% ஆக இருக்கும்.

5/11
சம்பள உயர்வு கணக்கீடு
சம்பள உயர்வு கணக்கீடு

ஊதிய உயர்வு கணக்கீடு: ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் 30,00 ரூபாய் என்றால். தற்போது அவர் டிஏவாக அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம், ரூ.15,000 பெறுவார். டிஏவில் 3 சதவீதம் உயர்வு இருந்தால், சம்பளத்தில் டிஏ மாதம் ரூ.15,900 ஆக உயரும். அதாவது சம்பளம் மேலும் ரூ.900 அதிகரிக்கும்.

6/11
டிஏ அரியர்
டிஏ அரியர்

அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் அமலில் இருக்கும். அதாவது ஜூலை மாதம் முதலான அகவிலைப்படி அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். உதாரணமாக, அக்டோபரில் டிஏ உயர்வுக்கான அறிவிப்பு வந்தால், அக்டோபர் மாத சம்பளத்தில் மூன்று மாத டிஏ பாக்கியும் சேர்க்கப்படும்.

7/11
மத்திய அரசு
மத்திய அரசு

இதுவரை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட முறையைப் பார்த்தால், நவராத்திரிக்கு முன் நடத்தப்படும் மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டங்களில் இதற்கான ஒப்புதல் பெரும்பாலும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த முறை, செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 24 -க்குள் டிஏ உயர்வு அறிவிக்கப்படலாம் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

8/11
அகவிலைப்படி
அகவிலைப்படி

ஜனவரி 2024 -க்கான டிஏ உயர்வு 4% ஆக இருந்தது. இதைத் தொடந்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Allowance) 50% ஆக அதிகரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வெளிவந்தது. 

9/11
டிஏ உயர்வு
டிஏ உயர்வு

இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்கு முன் எப்படியும் டிஏ உயர்வுக்கான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகின்றது. அக்டோபரில் அகவிலைப்படி வந்தால், 3 மாத டிஏ அரியர் தொகை கிடைக்கும். இது பண்டிகை காலத்தில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.

10/11
அகவிலைப்படி கணக்கீடு
அகவிலைப்படி கணக்கீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு இதுதான்: டிஏ கணக்கீடு - DA% = [(கடந்த 12 மாதங்களுக்கான சராசரி AICPI - 115.76)/115.76] x 100; பொதுத்துறை ஊழியர்களுக்கான டிஏ கணக்கீடு - DA% = [(கடந்த 3 மாதங்களுக்கான சராசரி AICPI - 126.33)/126.33] x 100. இங்கு, AICPI என்பது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டைக் குறிக்கிறது.   

11/11
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 





Read More