PHOTOS

7th pay commission: ₹44,900 சம்பளத்தில் வேலை வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

காப்பானதாக கருதப்படுகிறது. கணிசமான சம்பளமும் கிடைக்கும், அத்துடன் வேலைவாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற ...

Advertisement
1/5
பயிற்சி ஜூனியர் இன்ஜினியர்
பயிற்சி ஜூனியர் இன்ஜினியர்

அரசு வேலைவாய்ப்பின் மிகப்பெரிய நல்ல விஷயம் என்னவென்றால், அவை 7வது ஊதியக்குழு முறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 7வது CPC நிலை 7வது ஊதிய மேட்ரிக்ஸின் படி பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டகளுக்கு வழங்கப்படும் சம்பளம்-  ₹44,900 (minimum level in revised pay matrix) அரசு வேலைகளில் சமீபத்திய செய்தி சலுகைக்கான எரிசக்தித் துறை, உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன்  லிமிடெட் (UPPCL) ஜூனியர் இன்ஜினியர் (Trainee) பதவிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. 191 பயிற்சி ஜூனியர் இன்ஜினியர் (Trainee electrical) மற்றும் ஜூனியர் இன்ஜினியர் உட்பட 212 காலியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 28 வரை பெறப்படுகிறது. ஆஃப்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி டிசம்பர் 30 ஆகும்.  

2/5
கணினி அடிப்படையிலான சோதனை
கணினி அடிப்படையிலான சோதனை

UPPCL ஜூனியர் இன்ஜினியர் தேர்வு நடைமுறை மற்றும் தேர்வு மையங்கள் கணினி அடிப்படையிலான சோதனை (CBT)  ஆன்லைன் தேர்வு வாரணாசி, லக்னோ, கோரக்பூர், கான்பூர், பரேலி, காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் மீரட் ஆகிய பல்வேறு மையங்களில் நடத்தப்படும். 200 மதிப்பெண்கள் கொண்ட தேர்வுக்கு 3 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும். மொத்தம் 200 இல் 150 கேள்விகள் டிப்ளோமா அளவிலான பொறியியல் பாடத்திட்டங்கள் மற்றும் general awareness தொடர்புடையதாக இருக்கும்.  தலா 20 கேள்விகள் பகுத்தறிவு மற்றும்  இந்தி மொழி (Hindi) தொடர்பானதாக இருக்கும். 2020 ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 40. ST/SC/OBC (non-creamy level) க்கு உயர் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும், மாற்றுத் திறனாளிகள் பிரிவினருக்கு வயது வரம்பில் 15 ஆண்டுகள் தளர்வு கொடுக்கப்படும்.

3/5
எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்

எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் (Electrical Engineering) மூன்று ஆண்டு டிப்ளோமா என்பது கல்வித் தகுதியாக வைக்கப்பட்டிருக்கிறது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரவித் சிக்ஷா பரிஷத் அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமா பெற்றவர்களாக இருக்கலாம். இதைத் தவிர, ஏ.ஐ.சி.டி.இ (AICTE) அங்கீகாரம் பெற்ற மூன்று வருட அகில இந்திய டிப்ளமோ பரீட்சை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (Electrical Engineering) டிப்ளமோ சான்றிதழ் இருக்கவெண்டும். இது இந்தியாவின் எந்த இந்திய பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றதாக இருக்கலாம்.  

4/5
கல்வித் தகுதி
கல்வித் தகுதி

ஜூனியர் இன்ஜினியர் (பயிற்சி-எலெக்ட்ரானிக்ஸ் / டெலி கம்யூனிகேஷன்) கல்வித் தகுதி:  உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரவித் சிக்ஷா பரிஷத் அல்லது எலக்ட்ரானிக்ஸ் / டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மூன்று ஆண்டு டிப்ளோமா அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமா. ஏ.ஐ.சி.டி.இ (AICTE) நடத்திய எலெக்ட்ரானிக்ஸ் / டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics/ Tele Communication Engineering) மூன்று ஆண்டு அகில இந்திய டிப்ளோமா தேர்வு மற்றும் ஏதேனும் ஒரு இந்திய பல்கலைக்கழகத்திலிருந்தும் எலக்ட்ரானிக்ஸ் / டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் டிப்ளோமா படிப்பு

 

5/5
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம்

யுபிபிசிஎல் (UPPCL) ஜூனியர் இன்ஜினியர் விண்ணப்பக் கட்டணம் மாநிலத்தின் UR/general/OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ .1000 செலுத்த வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 700 ரூபாய் கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மாற்றுத் திறனாளிகள் processing Charge என்ற வகையில் 10 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். UPPCL பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பிற மாநிலங்களை சேர்ந்த விண்ணப்பதார்ர்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் 1000 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.  





Read More