PHOTOS

மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ ஹை, மற்றொன்று? புத்தம் புது அப்டேட்

ு ஊழியர்கள் பல நாட்களாக ஜூலை 2024-கான அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாத...

Advertisement
1/11
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இது மகிழ்ச்சியான நேரம். அவர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு நல்ல செய்திகள் வரவுள்ளன. அதில் ஒன்று அவர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு அப்டேட்தான். மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள 2 நல்ல செய்திகள் என்ன? அதை பற்றி விவரமாக இந்த பதிவில் காணலாம்.

2/11
7வது ஊதியக்குழு
7வது ஊதியக்குழு

மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக ஜூலை 2024-கான அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அவர்களுக்கான முதல் நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் (Dearness Allowance) அகவிலை நிவாரணமும் (Dearness Relief) 3% அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.

3/11
அகவிலைப்படி
அகவிலைப்படி

ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு 3% ஆக இருந்தால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணமும் 53% ஆக அதிகரிக்கும். இதன் பின்னர் அவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். 

4/11
ஏஐசிபிஐ குறியீடு
ஏஐசிபிஐ குறியீடு

செப்டம்பர் மாத தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் கிடைக்கவுள்ளது.  புதிய புள்ளிவிவரங்களுடன் மாதம் தொடங்கும். ஜூலை 2024-க்கான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் ஜூலை 2024 இல் வெளியிடப்படும். இதில் நல்ல அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை முதலான ஏஐசிபிஐ எண்கள் ஜனவரி 2025-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

5/11
டிஏ உயர்வு
டிஏ உயர்வு

7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024-க்கான டிஏ உயர்வு (DA Hike) பற்றி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். எனினும், அரசு இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. இதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கலாம். செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

6/11
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. தற்போது, ​​ஜனவரி 2024 முதல் ஊழியர்கள் 50 சதவீத டிஏ பெறுகின்றனர். சமீபத்தில் ஜூன் 2024 -க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் டிஏ ஹைக் குறித்த தெளிவு கிடைத்துள்ளது. 

7/11
அகவிலைப்படி
அகவிலைப்படி

டிசம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை, CPI-IW 2.6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது 138.8 இல் இருந்து 141.4 ஆக ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக, அகவிலைப்படி உயர்வின் சதவீதம் 50.28% இல் இருந்து 53.36% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

8/11
அகவிலைப்படி கணக்கீடு
அகவிலைப்படி கணக்கீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கு: டிஏ% = [(கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (2001 அடிப்படை ஆண்டு = 100)  – 115.76)/115.76] x 100 / பொதுத்துறை ஊழியர்களுக்கு: டிஏ% = [(கடந்த 3 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100.

9/11
ஊதிய உயர்வு கணக்கீடு
ஊதிய உயர்வு கணக்கீடு

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி, லெவல்-1ல் உள்ள மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18000 -இல் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.56900 வரை இருக்கிறது. குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ.18,000 -இல் ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம். 1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000 2. புதிய அகவிலைப்படி (53%) - ரூ 9540/மாதம் 3. இதுவரையிலான அகவிலைப்படி - (50%) ரூ 9000/மாதம். 4. அகவிலைப்படி அதிகரிப்பு - 9540-9000= ரூ 540/மாதம் 5. 6 மாதங்களுக்கான சம்பள உயர்வு - 540X6= ரூ 3,240

10/11
ஊதிய உயர்வு கணக்கீடு
ஊதிய உயர்வு கணக்கீடு

அதிகபட்ச அடிப்படை ஊதியமான ரூ.56,900 -இல் ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்.

அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ 56,900 இல் சம்பள உயர்வு கணக்கீடு: 1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900 2. புதிய அகவிலைப்படி (53%) - ரூ 30,157/மாதம் 3. இதுவரையிலான அகவிலைப்படி (50%) - ரூ. 28,450/மாதம் 4. அகவிலைப்படி அதிகரிப்பு - 30,157-28,450= ரூ 1707/மாதம் 5. 6 மாதங்களுக்கான சம்பள உயர்வு - 1707X6= ரூ 10,242

11/11
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. மேலும், இங்கே கொடுகப்பட்டுள்ள கணக்கீடு மதிப்பீடுகளின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சம்பளம் அதனுடன் மற்ற கொடுப்பனவுகளைச் சேர்த்த பின்னரே கணக்கிடப்படுகின்றது.





Read More