PHOTOS

மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் டிஏ ஹைக் அறிவிப்பு, ஊதிய உயர்வு கணக்கீடு இதோ

னவரி மாத அகவிலைப்படி உயர்வை மார்ச் மாதத்திலும், ஜுலை மாத டிஏ உயர்வை அக்டோபர் மாதத்திலும் அரசாங்கம் அறிவிக்கின்றது. எனினும், இந்த ஆண்டு ...

Advertisement
1/12
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

ஜுலை 2024-க்கான அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. இந்த மாதமே அந்த நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி எவ்வளவு, எப்போது அதிகரிக்கும்? இது குறித்த சமீபத்திய புதுப்பித்தல்களை இந்த பதிவில் காணலாம்.

2/12
7வது ஊதியக் குழு
7வது ஊதியக் குழு

7வது ஊதியக்குழு: இந்த மாதமே, அதாவது செப்டம்பர் மாதமே அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக அரசாங்க வட்டாரங்ககள் தெரிவிக்கின்றன. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) ஒரு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. நீண்ட நாட்களாக  இதற்கான காத்திருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3/12
ஏஐசிபிஐ குறியீடு
ஏஐசிபிஐ குறியீடு

ஜனவரி முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ ஐடபிள்யூ குறியீட்டுத் தரவுகளின் அடிப்படையில், ஜூன் ஏஐசிபிஐ குறியீட்டில் (AICPI Index) 1.5 புள்ளிகள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில், ஊழியர்களுக்கு ஜூலை 2024 -இல் 3% டிஏ உயர்வு (DA Hike) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், மற்றொரு கணக்கீட்டின் படி, டிஏ ஹைக் 4% ஆக இருக்கும் என்றும் ஒரு சாரார் கூறி வருகிறார்கள்.

4/12
ஊதிய உயர்வு
ஊதிய உயர்வு

அகவிலைப்படி 3% அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூத்யதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Alowance) 53% ஆக அதிகரிக்கும். இது 4% உயர்ந்தால், டிஏ மற்றும் டிஆர் 54% ஆக உயரும். எப்படியும் இந்த முறை ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு காத்திருக்கின்றது.

5/12
டிஏ உயர்வு அறிவிப்பு
டிஏ உயர்வு அறிவிப்பு

அகவிலைப்படி உயர்வு செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என முன்னரே கூறப்பட்டது. தற்போது 25 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் உள்ள நிலையில், அன்றே அரசு டிஏ உயர்வுக்கான அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது.

6/12
டிஏ உயர்வு
டிஏ உயர்வு

வழக்கமாக ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வை மார்ச் மாதத்திலும், ஜுலை மாத டிஏ உயர்வை அக்டோபர் மாதத்திலும் அரசாங்கம் அறிவிக்கின்றது. எனினும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது. இந்த செய்தி ஊழியர்களுக்கு ஒரு சர்ப்ரைசாக வந்துள்ளது.

7/12
சம்பள உயர்வு கணக்கீடு
சம்பள உயர்வு கணக்கீடு

ஊதிய உயர்வு கணக்கீடு: ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் மாதச் சம்பளம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம். அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவருக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும். இந்த தொகை பல்வேறு லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்துக்கு ஏற்றவாறு மாறுபடும்.

 

8/12
டிஏ அரியர்
டிஏ அரியர்

செப்டம்பரில் டிஏ ஹைக் கிடைத்தால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் 2024 இன் சம்பளம்/ஓய்வூதியத்தில் இந்த உயர்வு கிடைக்கும். இதனுடன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான டிஏ அரியர் தொகையும் கிடைக்கும். இந்த வகையில் அக்டோபர் மாதம் அவர்கள் பெறும் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 

9/12
டிஏ
டிஏ

இதற்கு முன்னர் 2024 ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் 4 சதவீதம் உயர்த்தியது. அதன் பின்னர் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50% ஆக உயர்ந்தது.

10/12
அகவிலைப்படி
அகவிலைப்படி

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கபடுகின்றது. இது ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பில் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கபடுகின்றது. 

11/12
ஊதிய உயர்வு
ஊதிய உயர்வு

ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் திருத்தம் ஏற்படுகின்றது. இதன் மூலம் ஊழியர்களுக்கு பெரிய அளவில் ஊதிய உயர்வு கிடைக்கின்றது. 

12/12
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 





Read More