PHOTOS

மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?

்குழு ஏமாற்றம் அளித்துள்ள இந்த நேரத்தில் டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்...

Advertisement
1/9
7வது உதியக் குழு
7வது உதியக் குழு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் உள்ளது. நீண்ட நாட்களாக 8அது ஊதியக்குழுவின் உருவாக்கம் மற்றும் 7வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். அவற்றின் சமீபத்திய புதுப்பிப்பை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

2/9
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

8வது ஊதியக்குழு அமைப்பது பற்றி நீண்ட நாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதன் படி பார்த்தால் 2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும். அதற்கு இப்போது அதற்கான அறிவிப்பு வெளிவர வேண்டும்.

 

3/9
8வது ஊதியக்குழு
8வது ஊதியக்குழு

8வது ஊதியக் குழுவின் உருவாக்கம் குறித்து மாநிலங்களவையில் சமீபத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த  நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் குறித்து அரசாங்கம் இரண்டு கோரிக்கைகளைப் பெற்றுள்ளது என்றும், ஆனால், புதிய ஊதியக்குழு அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்றும் கூறினார். இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

4/9
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

இதற்கிடையில் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காகவும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக்குழு ஏமாற்றம் அளித்துள்ள இந்த நேரத்தில் டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

5/9
7வது உதியக்குழு
7வது உதியக்குழு

7வது உதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் (Dearness Allowance), ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

6/9
ஏஐசிபிஐ குறியீடு
ஏஐசிபிஐ குறியீடு

தற்போது ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI) எண்களின் அடிப்படையில் ஜூலை 2024-க்கான டிஏ உயர்வு (DA Hike) 4% அல்லது 5% இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி (Dearness Allowance) 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 54% ஆக அதிகரிக்கும். டிஏ 5% அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 55% ஆக உயரும்.

7/9
டிஏ ஹைக்
டிஏ ஹைக்

பொதுவாக ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும், ஜூலை மாத அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஆக்ஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலும் அறிவிக்கப்படும். இப்போதும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் டிஏ ஹைக் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8/9
சம்பள உயர்வு
சம்பள உயர்வு

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியையும் ஓய்வூதியதாரர்கள் (Pensioners) 50% அகவிலை நிவாரணத்தையும் (Dearness Relief) பெற்று வருகிறார்கள். இதில் 4 அல்லது 5% உயர்வு ஏற்பட்டால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு கிடைக்கும்.  

9/9
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.  





Read More