PHOTOS

நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்களா? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!!

Love : ஒருவருக்கு காதல் வந்துவிட்டதா இல்லையா என்பதை நாம் சில அறிகுறிகளை வைத்து கண்டுபி...

Advertisement
1/8
Texting
Texting

இரண்டு பேரும் எங்கு இருந்தாலும், ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்டே இருப்பீர்கள். உங்கள் வாழ்வில் எந்த பெரிய விஷயம் நடந்தாலும், சிறிய விஷயம் நடந்தாலும் முதலில் அவரிடம் சொல்ல வேண்டும் என உங்களுக்கு தோன்றும். 

2/8
Positive Feeling
Positive Feeling

பாசிடிவான உணர்ச்சி:

அந்த நபருடன் சில மணி நேரங்கள் பேசிய பிறகு, உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும். மனதில் மகிழ்ச்சி  உண்டாகும். 

3/8
Knowing
Knowing

அவரைப்பற்றியும் அவரது வாழ்க்கை பற்றியும் சிறு சிறு தகவல்கள் கூட உங்களுக்கு நினைவில் இருக்கும். நீங்கள் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதற்கான அறிகுறி இது. 

4/8
Futuristic Thinking
Futuristic Thinking

அவரைபற்றி நீங்கள் நினைக்கும் போது, உங்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணங்கள் இருக்கும். அவருடன் இத்தனை வருடங்கள் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்ப்பீர்கள். 

5/8
Feels Real
Feels Real

இதற்கு முன்னர் நீங்கள் இருந்த காதல் உறவுகளை விட இது வித்தியாசமான உறவாக இருக்கும். முன்னர் செய்த தவறை, இந்த உறவில் உங்களுக்கு செய்ய தோன்றாது. 

6/8
Empathy
Empathy

புரிந்து கொள்ளுதல்:

நீங்கள் காதலிப்பதாக நினைக்கும் நபருக்கும் உங்களுக்கும் புரிதலும், புரிந்துணரும் திறனும் அதிகமாக இருக்கும். அவர் மனம் புண்பட்டால் உங்கள் மனம் தாளாது. அவருக்கு ஒரு விஷயம் மகிழ்ச்சியை கொடுத்தால், உங்களுக்கும் அந்த விஷயம் மகிழ்ச்சியை தரும். 

7/8
Disinterested
Disinterested

உங்களுக்கு அவர் மீது இருக்கும் ஈர்ப்பு, வேறு யார் மீதும் இருக்காது. பிற ஆண்களை அல்லது பெண்களை பார்க்கும் போது அவர் உங்கள் கண்களுக்கு அழகாக தோன்றினாலும், அவர் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்படாது. 

8/8
Attention
Attention

கவனம்:

உங்களுக்கு பிடித்த நபர் உங்களிடம் பேசும் போது, அல்லது அவர் உங்கள் அருகில் இருக்கும் போது உங்களது கவனம் முழுவதும் அவர் மீதுதான் இருக்கும். 





Read More