PHOTOS

மலச்சிக்கலை தீர்க்க வேண்டுமா? ‘இந்த’ 5 பழங்களை சாப்பிடுங்கள்!

Best Fruits For Constipation: மலச்சிக்கலால் அவதிப்படுவோர், கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்களின் லிஸ்ட். 

...
Advertisement
1/7
Constipation
Constipation

பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையாக இருக்கும். மூன்று நாட்களுக்கும் மேலாக குடல் இயக்கம் சரியாக இல்லையென்றால் மலச்சிக்கல் ஏற்படும். இருப்பினும், இது ஒருவருக்கொருவர் மாறும். 

2/7
Constipation
Constipation

சரியாக உடற்பயிற்சி இன்மை, சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது, தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். ஆனால், இதுவும் எளிதில் தீர்க்கக்கூடிய ஒரு விஷயம்தான். இதை தவிர்க்க சில பழங்களை சாப்பிடலாம். அவை என்னென்ன தெரியுமா?

3/7
Pears
Pears

பேரிக்காய்:

பேரிக்காயில் 5.5 கிராம் ஃபைபர் சத்துக்கள் உள்ளது. ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 20% ஃபைபர் சத்துக்கள் தேவைப்படுகிறது. இதனால், தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிடுவதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

4/7
Dragon Fruit
Dragon Fruit

டிராகன் பழங்கள்:

டிராகன் பழத்தில், சிகப்பு மற்றும் மஞ்சள் தோள் படிந்தது என இரண்டு பழங்கள் உள்ளது. இந்த இரண்டு பழங்களிலுமே கருப்பு சீட்கள் இருக்கின்றன. இதில், 5 கிராம் ஃபைபர்கள் உள்ளது. இதனால், இப்பழத்தை ஜூஸ் ஆகவோ, அப்படியேவோ சாப்பிடலாம். 

5/7
Apples
Apples

ஆப்பிள்:

ஆப்பிள் பழம், சாறாக குடிக்கவும் அப்படியே சாப்பிடவும் உகந்த பழமாகும். இதில், 4 கிராம் ஃபைபர் சத்து உள்ளது. ஆப்பிள் சாப்பிடுவதால் குடல் இயக்கம் சரியாகும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

6/7
Citrus Fruits
Citrus Fruits

சிட்ரஸ் பழங்கள்:

திராட்சை பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்டவை சிட்ரஸ் பழங்கள் வகையில் அடங்கும். இந்த பழங்களிலும் 4 சதவிகித ஃபைபர் சத்துக்கள் உள்ளன. எனவே, இந்த பழங்களை சாப்பிட்டாலும் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. 

7/7
Kiwi
Kiwi

கிவி பழங்கள்:

கிவி பழத்தில் 2 கிராம் ஃபைபர் உள்ளது. இது, வயிறு மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. சாலட் அல்லது முழு பழமாக இதை எடுத்துக்கொள்ளலாம். இதை ஸ்மூதியாகவும் குடிக்கலாம். 





Read More