Home> Movies
Advertisement

இசையமைப்பாளர் டி.இமான் இசையில் இணையத்தைக் கலக்கும் “மாயோனே” பாடல்

இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான “மாயோனே” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.   

இசையமைப்பாளர் டி.இமான் இசையில் இணையத்தைக் கலக்கும் “மாயோனே” பாடல்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வசம் எனப் பல படங்கள் முழு ஆல்பம் ஹிட்களாக, இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. 

தமிழ் இசை உலகில், ரசிகர்களின் பாடல் பிளே லிஸ்டில் நீங்காத இடம் பிடித்துள்ளது டி.இமான் பாடல்கள். அந்த வரிசையில் தற்போது, கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புச்செழியன் அவர்கள் தயாரிப்பில், நட்சத்திர நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இங்க நான்தான் கிங்கு‘ என்ற படத்தின் ‘மாயோனே செல்ல மாயோனே‘ என்ற பாடல், சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாறியுள்ளது. இணையம் முழுக்க REELS-களாக இப்பாடல் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் அனைத்து தரப்பு பெண்களையும் மிகவும் கவர்ந்துள்ளது இப்பாடல். 

மாயோனே பாடல் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக மாறியுள்ளது. 

மேலும் படிக்க | “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீடு

பட வெளியீட்டுக்கு முன்னதாக பாடலுக்குக் கிடைத்து வரும் மிகப்பெரிய வரவேற்பால், இசையமைப்பாளர் டி.இமான் அவர்களும் தயாரிப்பாளர் திரு G.N. அன்புச்செழியன் அவர்களும் மற்றும் படத்தின் நாயகன் சந்தானம் அவர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் இந்த திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சந்தானம் நடிக்கும் இங்க நான் தான் கிங்கு:
‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, மறைந்த நடிகர் மனோபாலா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பாலசரவணன், ’லொள்ளு சபா’ மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம். தியாகராஜன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தற்கொலைக்கு முயன்ற நடிகை மும்தாஜ்! இவருக்கு பின்னால் இப்படியொரு கதையா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More