Home> Movies
Advertisement

ஷக்திக்கு சவால் விடும் பூஜா... நடந்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

Meenakshi Ponnunga Latest Update: ஷக்திக்கு சவால் விடும் பூஜா... நடந்தது என்ன - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் .    

ஷக்திக்கு சவால் விடும் பூஜா... நடந்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  தமிழ் தொலைக்காட்சிகளின் பிரபலமான தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கருவாகும். தமிழ் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சின்னத்திரை பிரபலங்களான மோக்‌ஷிதா பாய், ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

லும் படிக்க | இசைக் கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடி.. ஏசிடிசி இயக்குநர் புதிய விளக்கம்

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோஹித் பூஜாவை வெளியே கூட்டி சென்று மரண பயத்தை காட்டிய நிலையில் பூஜாவை ரோகித் கொல்வது போல் கனவு கண்டு பூஜா பயத்தில் இருக்க, சக்தி வந்து பூஜாவிடம் ரோகித் உன்னை கொல்வதாக கனவு கண்டாயா எனக் கேட்க பூஜாவுக்கு பயம் அதிகமாக தூரத்தில் இருந்து ரோகித் பூஜாவை கோவத்துடன் பார்க்க, பூஜா ஓடிப்போய் ரூமில் மறைந்து கொள்கிறாள்.  அடுத்ததாக ரோகித் பூஜாவை காரில் ஏற்றிக் கொண்டு போகிறான் திடீரென ரோகித் துப்பாக்கி எடுத்துக்காட்ட பூஜா பயத்தில் இருக்க, நான் ஐ லவ் யூ சொல்லி விட்டேன். நீ ஏன் ஐ லவ் யூ சொல்லவில்லை என்று விளையாட்டாக பேச பூஜா ரோகித்தை புரியாமல் பார்க்கிறாள். இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

fallbacks

அதாவது, ரோகித் பூஜா வீட்டிற்கு வர ரோகித் தனக்கு பழசெல்லாம் மறந்துவிட்டது என்று கூறுகிறான். பூஜா சக்தியிடம் நீ ரோகித்தை எத்தனை முறை காப்பாற்றினாலும் அவனை கொல்வது உறுதி என்று சவால் விடுகிறாள். ரோகித்தை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போய் சேர்க்க செய்கிறார்கள்,
வெற்றியும் சக்தியும் டாக்டருக்கு நன்றி சொல்கிறார்கள். அடுத்ததாக வெற்றியும் சக்தியும் ரொமான்ஸ் ஆக இருக்க, இதை அறிந்து கொண்ட பூஜா என்னுடைய ஹேண்ட் பேக் சக்தியின் ரூமில் இருக்கிறது சென்று எடுத்து வா என்று கூறி ரோகித்தை வைத்து அவர்களுக்கு இடையூறு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | லண்டனில் கெத்து காட்ட தயாராகும் லியோ... வெளியான புதிய அறிவிப்பு..குஷியில் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More