Home> Movies
Advertisement

சந்தியா ராகம்: போட்டிக்கு கிளம்பிய தனம்.. ஷாரு போடும் பிளான், சிக்க போவது யார்?

போட்டிக்கு கிளம்பிய தனம்.. ஷாரு போடும் பிளான், சிக்க போவது யார்? சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட் 

சந்தியா ராகம்: போட்டிக்கு கிளம்பிய தனம்.. ஷாரு போடும் பிளான், சிக்க போவது யார்?

Sandhya Raagam Serial Today March 13th Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தனத்தின் குடிசைக்குள் இருந்து வெளியே வருவதை மாயாவும் சீனுவும் பார்த்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது நான்கு பேரும் ஓரிடத்தில் கூடி பேச கார்த்திக் தனம் இந்த போட்டியில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும், அதை இதை மிஸ் பண்ணிட்டா வாழ்க்கை முழுவதும் கவலைப்படுவா என்று தன்னுடைய பிளாஷ்பேக் கதையை சொல்கிறான். இறுதியாக இனிமே தனமே முடிவு பண்ணட்டும் என்று சொல்லி விடுகிறான். 

அதன் பிறகு மாயாவும் சீனுவும் தனம் கண்டிப்பா இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து நாளைக்கு யாருக்கும் தெரியாமல் சீக்கிரம் குளிச்சி ரெடியாகிடு என்று சொல்கின்றனர். அதற்கேற்றாற் போல மறுநாள் தனமும் சீக்கிரம் குளித்து முடித்து ரெடியா மாயா தன்னுடைய ட்ரெஸ்ஸை கொடுத்து இதை போட்டுட்டு வெளியே போ, ஏன் என்றால் வெளிய போகிறது மாயா மாதிரி தான் தெரியணும் என்று சொல்ல தனமும் முதல் முறையாக பேண்ட் சர்ட் அணிந்து வெளியே செல்கிறாள். 

fallbacks

மேலும் படிக்க | Lover OTT: லவ்வர் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? வெளியானது செம அப்டேட்

இந்த நேரம் பார்த்து ஷாரு கண் விழிக்க யாரோ பேண்ட் சர்ட்டில் வெளியே செல்வது போல் தெரிய அது மாயா தான் என்று நினைத்து கொள்கிறாள். அடுத்து வெளியே வந்த தனம் அங்கு காத்திருக்கும் பவானியிடன் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்கிறாள். சீனுவும் மாயாவும் மேலே இருந்து அவளை வழியனுப்பி வைத்து அவர்களது ரூமுக்கு வந்து விடுகின்றனர். 

ஷாரு தன்னுடைய அம்மாவை கூப்பிட்டு மாயா வெளியே போய் இருக்கா இதை வச்சியே பெரிய பிரச்சனை பண்ணி அவளை இந்த வீட்டை வெளியே துரத்தணும் என்று பிளான் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சந்தியா ராகம் சீரியலை எங்கு பார்ப்பது?

சந்தியா ராகம் சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Ajith Kumar: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமாரின் தற்போதைய போட்டோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More