Home> Movies
Advertisement

அமுதாவும் அன்னலட்சுமியும்: உமா சதியால் குற்றவாளியாக நிற்கும் செந்தில், அமுதா எடுத்த முடிவு, மாயா வைத்த செக்

Amudhavum Annalakshmiyum September 14 Update: உமா சதியால் குற்றவாளியாக நிற்கும் செந்தில், அமுதா எடுத்த முடிவு, மாயா வைத்த செக் - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: உமா சதியால் குற்றவாளியாக நிற்கும் செந்தில், அமுதா எடுத்த முடிவு, மாயா வைத்த செக்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா அம்மன் சிலைக்கு மிளகாய் அரைத்து பூசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மாயாவுக்கு உடம்பில் எரிச்சல் வராமல் இருக்க, செந்தில் மிளகாய் அரைத்து பூச உமா வடிவேலுவை பார்த்து கண்ணை காட்ட, வடிவேலு தலை ஆட்ட செந்திலுக்கு உடம்பெல்லாம் எரிய தொடங்க அமுதா, அன்னம், மாணிக்கம் ஷாக் ஆகி பார்க்க பழனி, உமா சிரிக்கின்றனர். பிறகு செந்தில் அன்னலட்சுமியிடம் நான் எந்த தப்பு பண்ணலம்மா என சொல்கிறான்.

மேலும் படிக்க | லண்டனில் கெத்து காட்ட தயாராகும் லியோ... வெளியான புதிய அறிவிப்பு..குஷியில் ரசிகர்கள்

இதனை தொடர்ந்து பஞ்சாயத்தில் திடீரென அரிவாள் வந்து விழ அனைவரும் திரும்பி பார்க்க, அமுதாவின் அப்பா சிதம்பரமும் செல்வாவும் வர சிதம்பரம் என் மாப்பிள்ளை மேல பொய்யா பழி போட்டது யாரு, என் மாப்பிள்ளை சொக்க தங்கம் என வாதிட செல்வா இவங்க கிட்ட பேசி ஒண்ணும் பிரோயஜனம் கிடையாது, எப்படி டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ணிக்கலாம் என சொல்லிவிட்டு நகர்கின்றனர்.

fallbacks

பஞ்சாயத்தார் செந்திலிடம் அம்மன் சொல்றதை நீங்க கேட்டுத்தான் ஆகனும் என சொல்ல, மாயா அவரு என் கழுத்துல மீண்டும் தாலி கட்டி அவரோட மனைவியா என்னை ஏத்துக்கனும் என சொல்கிறாள். அமுதா என் புருஷன் நிரபராதின்னு நிரூபிக்க எனக்கு ஒரு மாசம் அவகாசம் குடுங்க என கேட்க மாயா அந்த ஒரு மாசமும் நான் அவரோட வீட்டுல தான் இருப்பேன் என சொல்ல அமுதா அதற்கு சம்மதம் சொல்கிறாள். 

ப்ளாஷ் கட்டில் செந்தில் பாத்ரூமில் குளிக்க போக, வடிவேலு அதில் உடம்பு அரிக்க பவுடர் கலந்து தெரிய வருகிறது. உமா வடிவேலுக்கு பணம் குடுத்து நான் சொன்ன மாதிரி நீ பண்ணதால அவனுக்கு உடம்பு எரிந்தது என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குருத்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | ஆபரேசன் தியேட்டரில் மாரி! பரிகார பூஜையில் சூர்யாவுக்கு வரும் தடைகள்! மாரி சீரியல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More