Home> Movies
Advertisement

சீதா ராமன் சீரியல்: அன்புவுடன் வந்து இறங்கிய அஞ்சலி.. சீதாவுக்கு உருவாகும் சிக்கல்

Seetha Raman Today's Episode Update: அன்புவுடன் வந்து இறங்கிய அஞ்சலி.. சீதாவுக்கு உருவாகும் சிக்கல் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

சீதா ராமன் சீரியல்: அன்புவுடன் வந்து இறங்கிய அஞ்சலி.. சீதாவுக்கு உருவாகும் சிக்கல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், நேற்றைய எபிசோடில் அஞ்சலிக்கு அன்புவுடன் கல்யாணமாக இதனால் சீதா அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சீதா அன்புவை பார்த்து அதிர்ச்சி அடைய நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணோம், கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்று சொல்கின்றனர், இனிமே அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று சொல்லி அஞ்சலி அன்புவுடன் கிளம்பி செல்ல சீதா தடுத்து நிறுத்துகிறாள். 

உன்னை நான் தான் கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன், அதனால் வீட்டிற்கு வந்துட்டு போங்க என்று சொல்ல அஞ்சலி நாங்க அங்க வந்தா, எங்களை பிரிச்சிடுவாங்க நான் வர மாட்டேன் என்று சொல்கிறாள். அன்புவும் நாங்க அங்கு வந்தா சரியா இருக்காது என்று சொல்லி கிளம்பி நீங்க வீட்டிற்கு வரலைனா நான் செத்து போய்டுவேன் என்று ஷாக் கொடுக்கிறாள் சீதா. 

பிறகு சீதாவுக்காக இருவரும் வீட்டிற்கு வர சம்மதம் சொல்ல காரில் வீட்டிற்கு வருகின்றனர், சீதா மட்டும் காரில் இருந்து இறங்க மகா அஞ்சலி எங்கே என்று கேட்கிறாள். பிறகு அஞ்சலி மணக்கோகத்தில் இறங்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். சீதா தான் கல்யாணம் செய்து வைத்ததாக மகா சீதாவை அறைகிறாள். அஞ்சலி அன்பு சீதா அண்ணியோட சொந்தகார பையன் தான், நாங்க லவ் பண்ணோம் அதனால் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்று சொல்கிறாள். இதனால் சீதா மீது எல்லாருக்கும் கோபம் அதிகமாகிறது. சேதுவும் நடந்தது தெரியாமல் சீதாவை திட்டுகிறார். 

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலீட் செய்த யுவன்.. விஜயின் ரசிகர்கள் தான் காரணமா?

அன்பு சீதாவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, அஞ்சலிக்கும் சீதாவுக்கு இருக்கும் உறவு பத்தி எனக்கு இன்னைக்கு தான் தெரியும் என்று சொல்கிறான். அர்ச்சனா சீதா எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் பண்ணி இருக்கா என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | மாற்றுத்திறனாளி குழுவினருக்கு இருசக்கர வாகனம் தந்த ராகவா லாரன்ஸ் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More