Home> Movies
Advertisement

பாணி பூரியில பானியே இல்லை! பரணியின் ஆசையை நிறைவேற்ற சண்முகம் என்ன செய்வான்?

Anna Serial Today Update : ஆசையா பரணி கேட்ட விஷயம்.. எடக்குமுடக்கா யோசித்து சிக்க போகும் ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

பாணி பூரியில பானியே இல்லை! பரணியின் ஆசையை நிறைவேற்ற சண்முகம் என்ன செய்வான்?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சௌந்தரபாண்டியை மண்ணை கவ்வ வைத்ததோடு வெளியே எடுத்து போட்ட பொருட்களை அவர்களை வைத்தே உள்ளே எடுத்து வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

வைகுண்டம் பரணி பற்றி பெருமையாக பேசுகிறார்.  நீயும் தான் அடிக்கடி அரிவாளை தூக்குற ஆனால் ஒரு முறையாவது தீர்வு கிடைச்சி இருக்கா? ஆனால் என் மருமகள் பரணி ஒரு முறை அரிவாளை தூக்கி பிரச்னையை தீர்த்து வச்சிட்டா பாரு என்று பரணியை பாராட்டி பேசி சந்தோசப்படுகிறார். 

அதனை தொடர்ந்து பரணியும் சண்முகமும் ரூமுக்குள் இருக்கும் போது ஷண்முகம் ஜாலியாக பேசுகிறான். நீ எனக்கு கிடைச்சது பெரிய பாக்கியம் புள்ள என்று காதலோடு பேசிவிட்டு, கண் திறந்து பார்த்தால் பரணி தூங்கி விட்டதை பார்த்து ஷாக் ஆகிறான், ஆனால் உண்மையில் பரணி தூங்குவது போல் நடித்து ஷண்முகம் காதலோடு பேசிய அனைத்தையும் கேட்டு ரசிக்கிறாள். 

அதன்பிறகு மறுநாள் பரணி கிளினிக்கில் ஒரு பாட்டிக்கு வைத்தியம் பார்த்து கொண்டிருக்க ஷண்முகம் அங்கு வருகிறான். அப்பொது சண்முகத்திடம் எனக்கு பாணி பூரி சாப்பிடணும் போல் ஆசையா இருக்கு என்று சொல்கிறான். இதனால் ஷண்முகமும் வெட்டுக்கிளியும் சேர்ந்து பாணி பூரி வாங்க கடைக்கு செல்கின்றனர். ஆனால் எங்கும் பாணி பூரி இல்லை. பிறகு ஒரு கடையில் பாணி பூரி கேட்க கடைக்காரர் பாணி பூரி இல்ல சோலா பூரி தான் இருக்கு என்று சொல்கிறார். 

உடனே வெட்டுக்கிளி அண்ணே பூரியை வாங்கிட்டு பாணியை நாமளே ரெடி பண்ணி அண்ணி கிட்ட பாணி பூரின்னு கொடுத்திடலாம் என்று ஐடியா கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More