Home> Movies
Advertisement

சன்னிலியோனின் தமிழ் திரைப்பட தலைப்பை கண்டுபிடிக்க இதோ -‘க்ளு’

நடிகை சன்னி லியோன் நடிக்கும் தமிழ் சரித்திர  திரைப்படத்தின் தலைப்பு நாளை வெளியாகுகிறது. 

சன்னிலியோனின் தமிழ் திரைப்பட தலைப்பை கண்டுபிடிக்க இதோ -‘க்ளு’

பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தற்போது தமிழ் சரித்திர படம் ஒன்றில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.

இந்த சரித்திர படத்தை செளகார்பேட்டை படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இதனால் கோலிவுட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்.இந்தப் படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாகிறது. இதனையடுத்து, #SunnyLeoneInTamil என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது. 

இதனிடையே, படத்தின் கடைசி எழுத்து, "வி"-என க்ளு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பயங்கரமாக யோசித்து வருகின்றனர்.

 

Read More