Home> Movies
Advertisement

இரும்புத்திரை திரைப்படதின் "யார் இவன்" சிங்கிள் இன்று வெளியாகிறது!

விஷால் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "இரும்புத்திரை". பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஷால் ஃபிலிம் ஃபேக்டரி" மூலம் படத்தினை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருக்கிறார்.

இரும்புத்திரை திரைப்படதின்

இத்திரைப்படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் அர்ஜுன் வில்லன் வேடம் ஏற்கிறார். 

படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் இப்படத்தின் டீசரினை படக்குழுவினர் வெளியிட்டனர். வரும் ஜனவரி 26-ஆம் நாள் இப்படம் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

இந்நிலையில் இப்படத்தின் "யார் இவன்" சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாகும் என நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்!

Read More