Home> Movies
Advertisement

லியோ ரூ.1000 கோடி வசூலை தொடுமா? தயாரிப்பாளர் சொன்னது என்ன?

லியோ படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜவான் படத்தின் முதல் நாள் வசூலையே இந்தப் படம் பின்தள்ளியுள்ளது. தற்போது படம் 1000 கோடி ரூபாய் வசூலைப் பெறுமா என்பதை பார்க்கலாம்.

லியோ ரூ.1000 கோடி வசூலை தொடுமா? தயாரிப்பாளர் சொன்னது என்ன?

லியோ படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜவான் படத்தின் முதல் நாள் வசூலையே இந்தப் படம் பின்தள்ளியுள்ளது. தற்போது படம் 1000 கோடி ரூபாய் வசூலைப் பெறுமா என்பதை பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19-ம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் இடையேயான ஒப்பந்த சிக்கலால் படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்பு தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு படம் வெளியானது. அதோடு ஸ்பெஷல் ஷோ காலை 9 மணிக்கு தான் தொடங்கியது. வழக்கமாக ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு அதிகாலை 4 மணிக்கே ஸ்பெஷல் ஷோ தொடங்கிவிடும், காலை 4 மணி, 7 மணி, 10 மணி, 1 மணி, 4 மணி, 7 மணி, 10 மணி என கிட்டதட்ட 7 ஷோக்கள் திரையிடப்படும். ஆனால் இம்முறை 5 ஷோக்கள் தான். ஜெயிலர் படத்துக்கும் இதேபோல 5 ஷோக்கள் தான். 

மேலும் படிக்க | விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சை.. த்ரிஷா லிப்லாக் ஆல் வந்த பிரச்சனையா?

லியோ படம் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படமாக அமையும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அதற்கான சாத்தியம் குறைவு தான் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். பேட்டி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பேசும் போது, அதிகாலை 4 மணி காட்சிக்கு முயற்சி செய்தும் அது கிடைக்கவில்லை என்றும் தமிழ்நாட்டில் இருந்து அதிகாலை காட்சியை காண கிட்டதட்ட 2 லட்சம் ரசிகர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், லியோ கண்டிப்பாக 1000 கோடி ரூபாயை வசூலிக்காது என்றும், அதை தயாரிப்பாளராக எதிர்பார்க்கவில்லை என்றும் பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ரஜினிகாந்த் லியோ படத்தை பார்த்துவிட்டு தன்னை அழைத்து பாராட்டியதாகவும் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் 171 படத்தை தான் இயக்க உள்ளார். அதனால் ரஜினியின் அடுத்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியின் போதே விஜய்க்கு கார் ஒன்றை பரிசளிக்க லலித்குமார் முயன்றாராம். ஆனால் விஜய்யோ சம்பளம் கொடுக்கிறீர்களே அதுவே போதும் எனக் கூறி கார் பரிசை வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.

மேலும் படிக்க | மருத்துவமனையில் பரிதாபமாக கிடக்கும் இளம் நடிகை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More