Home> Movies
Advertisement

நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?

Why Actor Vijay Likes Vijayakanth So Much? நடிகர் விஜய்க்கும் விஜயகாந்திற்கும் இருக்கும் நட்பு குறித்தும், விஜயகாந்தை ஏன் விஜயக்கு மிகவும் பிடிக்கும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.   

நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?

Why Actor Vijay Likes Vijayakanth So Much? தமிழ் திரையுலகின் டாப் நடிகராக வலம் வரும் விஜய், இன்னும் சில மாதங்களில் தனது கடைசி படத்தை முடித்து விட்டு அரசியலில் இறங்க இருக்கிறார். இவரது அரசியல் ஆர்வத்திற்கு காரணமாக இருந்தவர்களுள் ஒருவர் விஜயகாந்த் என சொல்லப்படுகிறது. விஜயகாந்திற்கும் விஜய்க்கும் இருக்கும் நட்பு எவ்வளவு ஆழமானது? விஜய்க்கு விஜயகாந்தை பிடிக்க காரணம் என்ன? இன்று மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள். இதையொட்டி, விஜய்க்கும் விஜயகாந்திற்கும் இருக்கும் உறவு குறித்து இங்கு அது குறித்து பார்ப்போம். 

விஜயகாந்தின் இறுதி சடங்கில் உடைந்து போன விஜய்!!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, தனது 71வது வயதில் உயிரிழந்தார். இவரது மரணம், சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரை கலங்க வைத்தது. காரணம், உண்மையாகவே மக்கள் குறித்து அக்கறை கொண்ட தலைவர்களுள் ஒருவராக நடிகர் விஜயகாந்த் விளங்கினார். இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள, கிராமங்களில் இருந்தும், நெடுந்தூரங்களில் இருந்தும் பல லட்சம் பேர் சென்னை நோக்கி படையெடுத்தனர். 

தமிழ் திரையுலக பிரபலங்களில் பெரும்பாலானோர், ஒருவர் விடாமல் விஜயகாந்த் இறந்த போது அவரை கடைசி முறையாக வந்து பார்த்தனர். அதில், மிக முக்கியமாக நடிகர் விஜய்யின் வருகை பார்க்கப்பட்டது. அப்போது கோட் படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஜய், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு இரவு விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது, அவரது முகம் பார்ப்பதற்கு ஏற்கனவே பல முறை அழுதது போல வீங்கி காணப்பட்டது. அது மட்டுன்றி விஜயகாந்தின் அசையாத முகத்தை பார்த்த அவர், உடைந்து போன நிலையில் இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் “இது போல விஜய்யை பார்த்ததே இல்லையே…” என்று கருத்து தெரிவித்தனர். 

fallbacks

விஜய்க்கும் விஜயகாந்திற்கும் இருக்கும் உறவு..

நடிகர் விஜய்யும் விஜயகாந்தும் இப்போதல்ல சுமார் 30 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்தது. நடிகர் விஜய், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படங்கள் மூலமாகத்தான் தனது திரை வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் வளர ஆரம்பித்தார். ஆனால், இவர் நடித்த சில படங்கள் ஆரம்பத்திலேயே சறுக்கல்களை சந்தித்தது. இதையடுத்து, தனது மகனின் திரைப்படம் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று நினைத்த எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்தை அணுகினார். 

மேலும் படிக்க | விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்-செருப்பை தூக்கியடித்த மர்ம நபர்கள்?

அது, விஜயகாந்த் டாப் ஹீரோவாக இருந்த நேரம் ஆகும். இதனால், தான் இயக்கிய செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க விஜயகாந்தை அணுகினார். அவரும் நடித்து கொடுக்க ஒப்புக்கொண்டு சொன்னது போல நடித்தும் கொடுத்தார். 

இதில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? இதில் நடித்து கொடுக்க விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லை என்பதுதான். விஜய் வளர வேண்டும் என்பதற்காக அவர் இந்த விஷயத்தை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. 

அண்ணன்-தம்பி போல..

நடிகர் விஜய், சிறுவயதில் இருந்தே விஜயகாந்தை பார்த்து வளர்ந்தவர். சொல்லப்போனால், அவரை உடன்பிறவாத அண்ணனாக பார்த்தாக கூறப்படுகிறது. லியோ படத்தின் வெற்றி விழாவின் போது, விஜயகாந்த் உயிருடன் இருந்தார். அப்போது, தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்களின் பெயர்களை கூறி பேசிய விஜய், ரஜினி, அஜித் பெயரை கூறுவதற்கு முன்னர், கேப்டன் விஜயகாந்த் என்று குறிப்பிட்டார். இதிலிருந்தே அவர் விஜயகாந்தின் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பது தெரிந்தது. விஜய்க்கு, விஜயகாந்தை இந்த அளவிற்கு பிடிக்க காரணம், அவரது வெகுளித்தனமான மனதும், கள்ளம் கபடம் அற்று மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும்தான். 

மேலும் படிக்க | Vijayakanth: GOAT படத்தில் நடிக்கும் மறைந்த நடிகர் விஜயகாந்த்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More