Home> Movies
Advertisement

ஹாலிவுட் லெவலில் உருவாகும் ‘KGF-3’? - வில்லனாக நடிக்கப்போவது இந்த நடிகரா?!

கேஜிஎஃப் மூன்றாம் பாகத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இதில் வில்லனாக நடிக்கப்போவது யார் எனும் கேள்வி எழுந்துள்ளது!

ஹாலிவுட் லெவலில் உருவாகும் ‘KGF-3’? - வில்லனாக நடிக்கப்போவது இந்த நடிகரா?!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப், ரசிகர்களிடையே உருவாக்கிய தாக்கம் அதன் இரண்டாவது பாகத்தை எதிர்நோக்கவைத்தது. 

அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி வெளியானது கே.ஜி.எஃப்-2. தெலுங்கிலிருந்து பான் - இந்தியா ரிலீஸாக வெளியான பாகுபலி சீரீஸ் படங்கள் வசூல் வேட்டை நடத்தியிருந்தாலும், பிற தென்னிந்தியப் படங்கள் அப்படியான சாதனைகளை நிகழ்த்தவில்லை. 

குறிப்பாக, கன்னட சினிமாவிலிருந்து அப்படி ஒரு படம் அண்மைக்காலத்தில் வந்திருக்கவில்லை. இந்த வரலாற்றைத்தான் தவிடுபொடியாக்கித் தற்போது புதிய வரலாறு எழுதியிருக்கிறது கே.ஜி.எஃப்-2.

                                                                              fallbacks

இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை இப்படம் படைத்துவருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்றால் எந்த அளவுக்கு இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனப் புரிந்துகொள்ளமுடியும். தென்னிந்தியா மட்டுமல்ல; வசூல் வேட்டையில் பாலிவுட்டையும் விட்டுவைக்கவில்லை இந்த கே.ஜி.எஃப்- 2. இரண்டாம் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக இதன் அடுத்த பாகத்துக்குத் தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

                                  fallbacks

மூன்றாம் பாகம் எப்படி இருக்கும் என பலரும் தங்களது கற்பனைக் குதிரையை பறக்கவிட்டு ஏகப்பட்ட கதைகளை சொல்லிவருகின்றனர். கேஜிஎஃப் சீரிஸ்களைப் பொறுத்தவரை யஷ்ஷுக்கு மட்டுமல்லாது அவற்றில் வில்லன்களாக நடிப்போர்க்கும் பார்வையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கனமான ரோல்கள் கொடுக்கப்படுகின்றன.

                                                fallbacks

இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் கதாபாத்திரம் அதில் இறந்துபோவதாகக் காட்டப்பட்டது. இதனால் மூன்றாம் பாகத்தில் வில்லனாக நடிக்கவுள்ளது யார் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் 3ஆம் பாகத்தில் வில்லனாக நடிகர் ராணா டகுபதி நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிக் கவனம் பெற்றிருந்தார் ராணா. அந்தக் கதாபாத்திரம் உருவாக்கிய தாக்கமே கே.ஜி.எஃப்- 3 படத்தில் அவர் இணைவதற்கான காரணம் எனவும் கூறப்படுகிறது.

                                                          fallbacks

மேலும் படிக்க | Beast vs KGF-2: இறுதியில் தமிழ்நாட்டில் வென்றது யார்?

 

கே.ஜி.எஃப் முதல் பாகம் நல்ல கவனத்தைப் பெற்றாலும் பெரிய அளவுக்கான பான் இந்தியா ரிலீஸ் அடையாளத்தை அது பெறவில்லை.  அடுத்ததாக வெளியான இரண்டாம் பாகம் ஒரு பக்காவான பான் - இந்தியா ரிலீஸாக அமைந்தது எனலாம். இந்த நிலையில் 3ஆம் பாகத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

அந்த வகையில் ஹாலிவுட் லெவலில் இப்படத்தின் ரிலீஸைக் கொண்டு செல்லத் திட்டம் உள்ளதாம். அதனால் ராணா மட்டுமல்லாது சில ஹாலிவுட் நடிகர்களும் இதில் வில்லன்களாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | எந்த ஓடிடியில் வெளியாகிறது கேஜிஎஃப் 2... ஓடிடி வியாபாரத்திலும் சாதனை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More