Home> Movies
Advertisement

40 வருஷத்துக்கு முன்னாடியே வந்த கமல்ஹாசனின் Multiverse மூவி!- என்ன படம்னு தெரியுமா?!

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே கமலின் ஒரு படம் கிராஸ் ஓவர் ஜானரில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அது என்ன படம் எனத் தெரியுமா?

40 வருஷத்துக்கு முன்னாடியே வந்த கமல்ஹாசனின் Multiverse மூவி!- என்ன படம்னு தெரியுமா?!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தின் திரைக்கதையில், கமல்ஹாசன் நடிப்பில் 1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம் மற்றும் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி ஆகிய படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. 

அதன்படி இப்படம், மல்ட்டிவெர்ஸ் எனும் கான்செப்ட் போல உருவாகியுள்ளது. ‘கிராஸ் ஓவர்’ ஜானர் எனவும் இவ்வகைப் படங்களை சிலர் அடையாளப்படுத்துகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல புதுமைகளை செய்துவந்த கமலுக்கு தற்போது வெளிவந்துள்ள விக்ரம் படமும் அப்படியான ஒன்றாக அமைந்துள்ளது என விமர்சகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற க்ராஸ் ஓவர் ஜானரில் அமைந்த கமலின் ஒரு படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல் தற்போது இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

fallbacks

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு வெளியான படம் 16 வயதினிலே. கமல்ஹாசன்- ரஜினி -ஸ்ரீ தேவி காம்போவில் உருவான இப்படமும் அதே பாரதிராஜா இயக்கத்தில் அடுத்ததாக வெளியான கிழக்கே போகும் ரெயில் படமும்தான் இந்த கிராஸ் ஓவர்  ஜானரில் சிக்கியுள்ளன. அதாவது 16 வயதினிலே படத்தின் க்ளைமாக்ஸில் ரஜினியை கொலைசெய்த வழக்கில் கமல்ஹாசன் சிறைக்குச் சென்றுவிடுவார். 

அவர் மீண்டும் திரும்பிவருவார் எனும் நம்பிக்கையில் ஸ்ரீ தேவி ரயில் நிலையத்தில் காத்து நிற்பதுபோல அந்தப் படம் நிறைவுபெறும். ஆனால் அவர் சிறையிலிருந்து திரும்பிவந்தாரா அவர்களுக்குள் திருமணம் நடந்ததா எனும் விஷயங்கள் அதில் காட்டப்படவில்லை.

ஆனால் அடுத்ததாக அவர் இயக்கிய ‘கிழக்கே போகும் ரெயில்’ படத்தில் இதற்கான பதிலை வைத்துள்ளார் பாரதிராஜா. அந்தப் படத்தின் ஒரு காட்சியில் விருந்துக்கு மொய்ப்பணம் எழுதுவதுபோல ஒரு காட்சி அமைந்திருக்கும். அப்போது குழாய் ரேடியோவில், “பெட்டிக்கடை மயில் புருஷன் சப்பாணி 5 ரூபா” என ஒலிக்கும்.

மேலும் படிக்க | அரசியலிலிருந்து விலகும் கமல்ஹாசன்? - Press Meet-இல் சொன்னது என்ன?!

fallbacks

அதாவது, சிறைக்குச் சென்ற சப்பாணி (கமல்) திரும்பிவந்து மயிலைத் (ஸ்ரீ தேவி) திருமணம் செய்துகொண்டதாக விவரிப்பதுபோல அந்தக் காட்சி அமைந்திருக்கும். பார்வையாளர்களும்கூட இந்தக் காட்சியை 16 வயதினிலே படத்துடன் எளிதில் கனெக்ட் செய்து புரிந்துகொள்ள முடியும். அதேபோல இந்தப் படத்தின் தொடக்கக் காட்சியும்கூட ஊருக்குள் ரெயில் வருவதுபோலத்தான் அமைந்திருக்கும். இந்த சுவாரஸ்யமான விஷயம்தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே கமலின் படம் ஒன்று இதுபோன்ற கிராஸ் ஓவர்/ மல்டிவெர்ஸ் கான்செப்டில் இடம்பெற்றுள்ளதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அதிக சம்பளம் பெறும் நடிகைகள்- நயன்தாராவை முந்திய பூஜா ஹெக்டே?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More