Home> Movies
Advertisement

தனுஷ் நடிக்கும் விஐபி-2 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

தனுஷ் நடிக்கும் விஐபி-2 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

தனுஷ், கஜோல், அமலா பால் நடிக்கும் ‘விஐபி-2’ படத்தின் போஸ்டர், பூஜை என பல அப்பேட்கள் அணிவகுத்து வருகின்றன. 

அந்த வரிசையில் இது குறித்து தனுஷ் அவரது டிவிட்டர் பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

 

 

தனுஷ் திரைக்கதையில் உருவாகவிருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படமான 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகம் இது.

தற்போது தனுஷ் அவரது டிவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு மோஷன் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.

 

 

Read More