Home> Movies
Advertisement

விக்ரம் பிரபு-வின் அடுத்த படம் "துப்பாக்கி முனை" - ஃபர்ஸ்ட் லுக் உள்ளே!

"துப்பாக்கி முனை" படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அறிவித்துள்ள படக்குழு, தங்கள் நாயகி யார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

விக்ரம் பிரபு-வின் அடுத்த படம்

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் திரைப்படம் "துப்பாக்கி முனை". இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது!

"கத்தி கப்பல்" எனும் படம் மூலம் தமிழ் திரையுலகற்கு அறிமுகமானவர் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். இவர் தற்போது விக்ரம் பிரபுவை வைத்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக "நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல" எனும் படத்தினை இயக்கியுள்ளார்.

வி.கிரியேஷன்ஸ் தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு 'துப்பாக்கி முனை' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'துப்பாக்கி முனை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ன் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

"துப்பாக்கி முனை" படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அறிவித்துள்ள படக்குழு, தங்கள் நாயகி யார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

Read More