Home> Movies
Advertisement

கதாநாயகனாக நடிக்கப்போகும் விஜய் டிவி ரக்ஷன்! ஹீரோயின் இவங்களா?

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் ஒருவராக இருந்து வரும் ரக்ஷன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ மோஷன் போஸ்டர் வெளியானது.  

கதாநாயகனாக நடிக்கப்போகும் விஜய் டிவி ரக்ஷன்! ஹீரோயின் இவங்களா?

விஜய் டிவியில் தொகுப்பாளராக, சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வந்த பலரும் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கின்றனர்.  விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார், இதுதவிர ரோபோ சங்கர், சந்தானம், மா.கா.பா போன்ற பலர் வெள்ளித்திரைக்கு வந்துள்ளனர்.  இவர்களின் வரிசையில் விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன் கதாநாயகனாக களமிறங்கிவிட்டார்.  'கலக்க போவது யாரு சீசன் 5' மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக ரக்ஷன் அறிமுகமானார், இவர் ஜாக்குலின் உடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  அந்த ஒரு சீசனிலேயே இவரது திறமை பலரையும் கவர்ந்துவிட, அடுத்தடுத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 6 மற்றும் 7வது சீசனையும் இவரே தொகுத்து வழங்கி வந்தார்.  ரக்ஷன் படத்தில் நடிப்பது இது முதல் தடவையல்ல, கடந்த 2020ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் துல்கர் சல்மானின் நண்பனாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  

மேலும் படிக்க | சமந்தா மிகவும்... கஸ்டடி பட பிரமோஷனில் விவாகரத்து பற்றி நாக சைதன்யா!

இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு முன்னர் ரக்ஷன் 'என் காதல் தேவதை' எனும் படத்தில் நடித்திருந்தார், ஆனால் இந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை.  இந்நிலையில் ரக்ஷன் புதிய படமொன்றில் முன்னணி கதாநாயகனாக நடிக்கிறார், தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ் அறிவிப்பு மோஷன் போஸ்டர் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  விஜய் டிவி ரக்ஷன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ராக்கோ.யோகேந்திரன் இயக்குகிறார், இந்த படத்திற்கு 'மறக்குமா நெஞ்சம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் மோஷன் போஸ்டரை வைத்து பார்க்கும்போது, படம் 90 களில் நடக்கும் ஒரு ஃபீல் குட் ஸ்கூல் டிராமாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை சம்மந்தப்பட்ட தொடர்களுக்கும், படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க வரவேற்பு இருந்து வருகிறது.  

இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களும், தொடர்களும் ஒவ்வொருவரின் பள்ளி, கல்லூரி காலங்களின் பசுமையான நியாபகங்களை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக இருக்கிறது.  அந்த வகையில் ரக்ஷன் நடிக்கும் இந்த மறக்குமா நெஞ்சம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் ஏற்கனவே ரக்ஷனுக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் கூட்டம் உள்ளது, இந்த படத்தின் மூலம் அவர் தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டத்திற்கு செல்வார் என்று கருதப்படுகிறது.

ஃபிலியா என்டர்டெயின்மென்ட் மற்றும் குவியம் மீடியா இணைந்து தயாரிக்கும் 'மறக்குமா நெஞ்சம்' படத்தில் ரக்ஷன், தீனா, மலினா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், ஆஷிகா காதர், மெல்வின் டென்னிஸ், துரோனா, நடாலி லூர்ட்ஸ், விஸ்வத் வாத்துல், முனிஷ்காந்த், அகிலா, அருண் குரியன் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  தொழில்நுட்பக் குழுவில் டிஓபியாக கோபி துரைசாமியும், எடிட்டராக ஷஷாங்க் மாலியும், கலை இயக்குநராக பிரேம் கருந்தமலையும் பணியாற்றுகின்றனர்.  மேலும் இப்படத்திற்கு சச்சின் வாரியர் இசையமைக்கிறார்.  தற்போது ரக்ஷன் விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்காதவர்கள் இருக்க முடியாது, அந்தளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.  தற்போது இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனிலிருந்து இந்த சீசன் வரை ரக்ஷன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் படிக்க | Jawan Update: பொறுத்தது போதும்..வந்தாச்சு ஜவான் பட அப்டேட்..ரிலீஸ் எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More