Home> Movies
Advertisement

லிஸ்ட்டு பெருசா போய்கிட்டே இருக்கு.. லியோ படத்தில் இவருமா?

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்தில் பிரபல விஜய் டிவி காமெடி நடிகர் பாலா இணைந்துள்ளார்.

லிஸ்ட்டு பெருசா போய்கிட்டே இருக்கு.. லியோ படத்தில் இவருமா?

லியோ படத்தில் முக்கிய அப்டேட்: தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்தரமான விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் லியோ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. பீஸ்ட், வாரிசு என கலவையான விமர்சனங்களை கடந்த இரண்டு படமும் எதிர்கொண்ட நிலையில், லியோவில் அதனை மொத்தமாக மறக்கவைத்து, புதிய சாதனை படைக்கும் முனைப்பில் விஜய் மற்றும் படக்குழு இருப்பது அதன் தயாரிப்பிலும், ஒவ்வொரு அப்டேட்டிலும் நாம் காண முடியும். 

இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்றுதான் லியோ. லோகேஷ் மற்றும் விஜய்யின் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தை பற்றிய பேச்சு தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான்.

மேலும் படிக்க | “நாங்க சென்னை சிட்டி கேங்ஸ்ட..” சென்னையின் அருமை பெறுமையை பேசும் அழகான பாடல்கள்..!

மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் விஷயங்களை சேர்ந்திருந்த லோகேஷ் லியோ படத்தை தன் ஸ்டைலில் உருவாக்கி உள்ளார். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து படத்தில் நடிக்கும் நட்சத்திர பட்டாளங்களும் படத்தின் எதிர்பார்ப்பிற்கு ஒரு காரணம் எனலாம்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார். விஜய்க்கு ஜோடியாக நடித்த த்ரிஷா கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்திருக்கிறார், தற்போது லியோ படத்தின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் நடிகர் த்ரிஷா. இந்த செய்தி வெளியான முதல் ரசிகர்கள் குஷியில் துள்ளி குத்தித்து வருகின்றனர்.

இதைத் தவிர இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலி கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடித்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மிகப்பிரமாண்டமான செட் அமைத்து லியோ படத்தின் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் லோகேஷ். இதில் விஜய், த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகளும், விஜய் மற்றும் சஞ்சய் தத் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டது. அதேபோல் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அர்ஜுன், மன்சூர் அலி கான் ஆகியோர் கலந்துகொண்டு நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது லியோ படம் குறித்து மற்றொரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் விஜய் டிவி காமெடி நடிகர் பாலா நடித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

லியோ படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் பதிவு ஒன்றை முன்னதாக வெளியிட்டது. கடந்த 13ஆம் தேதியன்று யாரும் எதிர்பாராத விதமாக இந்த அறிவிப்பினை லியோ படக்குழு வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல இயக்குநர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More