Home> Movies
Advertisement

உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகும் 'தளபதி 66'!

விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'தளபதி 66' படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகும் 'தளபதி 66'!

ஏரளமான ரசிகர்கள் பட்டாளத்தையும், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும் ஜொலித்து வருபவர் தளபதி விஜய். சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.  இப்பட பனியின் போதே 'தளபதி 66' படம் குறித்த அறிவிப்பு வெளியானது, அதனைத்தொடர்ந்து அறிவித்தபடியே படத்திற்கான பணிகளை படக்குழு கடந்த மாதம் கோலாகலமாக பூஜையுடன் தொடங்கியது.  தெலுங்கில் பல சிறப்பான படங்களை கொடுத்த வம்சி பைடிப்பள்ளி 'தளபதி 66' படத்தை இயக்குகிறார், மேலும் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

fallbacks

மேலும் படிக்க | விரைவில் வருகிறது மாஃபியா பார்ட் 2?

இந்த படத்தில் முதல் தடவையாக விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிக்கின்றனர்.  ஏற்கனவே நடிகர் பிரபு விஜயுடன் இணைந்து புலி மற்றும் தெறி போன்ற படங்களில் நடித்திருந்தார், அதேபோல நடிகர் பிரகாஷ் ராஜும், விஜயுடன் இணைந்து கில்லி, போக்கிரி மற்றும் வில்லு போன்ற படங்களில் நடித்திருந்தார்.  ஆனால் சரத்குமார் முதல்தடவையாக விஜயுடன் இணைந்து இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.  இப்படத்தை பற்றி கூறுகையில், படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான செண்டிமெண்ட் கொண்ட குடும்ப கதையம்சம் கொண்ட படமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

fallbacks

ஆரம்ப காலகட்டத்தில் விஜய் நடித்திருந்த துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக போன்ற செண்டிமெண்ட் படங்களை போன்று இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பல வருடங்களுக்கு பிறகு விஜய் நடிப்பில் ஒரு பக்காவான குடும்ப படம் வெளியாகி பலரையும் கொண்டாட வைக்கப்போகிறது.  படத்தின் கதையானது அனைவரையும் கவரும் வகையில் அமையும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.  இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  படத்தில் ஏகப்பட்ட நடிகர் மற்றும் நடிகைகள் நடிக்கின்றனர்.

மேலும் படிக்க | 'கைதி' படத்தின் தொடர்ச்சியா 'விக்ரம்'? லோகேஷின் மல்டிவெர்ஸ் கான்செப்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More