Home> Movies
Advertisement

Web Series-ல் விஜய் சேதுபதியின் சம்பளத்தை கேட்டு மிரண்டு போன திரை உலகம்

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் திரைப்பட உலகில் நுழைந்த விஜய் சேதுபதி என்ற இந்த காற்று தற்போது சூறாவளிக் காற்றாக ரசிகர்களின் நெஞ்சங்களில் மையம் கொண்டுள்ளது. ஒவ்வொரு படத்தின் மூலமும் புதிய உச்சங்காளை தொட்டுக்கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி.

Web Series-ல் விஜய் சேதுபதியின் சம்பளத்தை கேட்டு மிரண்டு போன திரை உலகம்

சில படங்கள், சில நடிகர்கள், சில இயக்குனர்கள்…. இப்படி சில விஷயங்கள் எப்போதும் எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்றன, விரும்பப்படுகின்றன, நேசிக்கப்படுகின்றன.

அந்த ‘சில நடிகர்களின்’ வரிசையில், தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதிக்கு நிச்சயமாக ஒரு இடம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை பாதித்துள்ளது.

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் திரைப்பட உலகில் நுழைந்த விஜய் சேதுபதி (Vijay Sethupathi) என்ற இந்த காற்று தற்போது சூறாவளிக் காற்றாக ரசிகர்களின் நெஞ்சங்களில் மையம் கொண்டுள்ளது. ஒவ்வொரு படத்தின் மூலமும் புதிய உச்சங்காளை தொட்டுக்கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி.

சமீபத்திய காலங்களில், வழக்கமான ஹீரோ கதாபாத்திரத்துக்கு பதிலாக சவாலான பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது அவரது உத்தியாக இருந்து வருகிறது.

'மாஸ்டர்' (Master) படத்தில் தளபதி விஜய்யுடன் (Vijay) அவர் நடித்தார். இப்படத்தில் இரக்கமற்ற வில்லனாக அவர் நடித்த நடிப்புக்கு உலகெங்கிலும் பலத்த பாராட்டுதல்களை பெற்று வருகிறார். மிகவும் தாழ்மையான குணமும் கடின உழைப்பும் கொண்ட விஜய் சேதுபதி சம்பள ரீதியாக ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார் என இப்போது செய்தி வந்துள்ளது.

ALSO READ: நடிகர் சிம்புவின் பிறந்தநாள் பரிசாக 5 மொழிகளில் வெளியானது 'மாநாடு' திரைப்பட Teaser

அகில இந்திய அளவில் உருவாகும் ஒரு வெப் சீரிசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்தி வந்துள்ளது. இதில் மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் ஷாஹித் கபூர் நடிக்கிறார். ராஷி கன்னா படத்தின் கதாநாயகியாக தீர்மானிக்கப்பட்டுள்ளார்.

இந்த வெப் சீரிசுக்கு சம்பளமாக விஜய் சேதுபதி 55 கோடி ரூபாயை பெற்றுள்ளதாக பாலிவுட் (Bollywood) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் நடிக்க ஷாஹித் கபூருக்கு 40 கோடியே கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. அவரை விட விஜய் சேதுபத்திக்கு அதிக சம்பளம் கிடைத்துள்ளது இந்திய திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஒரு சீசனுக்கு அப்பால் தொடர் நீடித்தால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கபூர் தனது ஒப்பந்தத்தில் ஒரு பிரிவைச் சேர்த்திருப்பதாகவும், விஜய் சேதுபதி அப்படி எந்த பிரிவையும் ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த மெகா வெப் சீரிஸ் ‘சன்னி’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘ஃபாமிலி மேன்’ என்ற புகழ்பெற்ற வெப் சீரிசை இயக்கிய ராஜ் மற்றும் டி.கே. இதையும் இயக்கவுள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் அமேசான் பிரைம் வீடியோவில் இந்த வலைத்தொடர் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ: ‘ஆதிபுருஷ்’ படம் பற்றிய அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டார் நடிகர் Prabhas!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More