Home> Movies
Advertisement

தளபதி 66 படப்பிடிப்பிற்காக விஜய் எடுத்த முக்கிய முடிவு

நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி-66' படத்தின் காட்சிகளை தமிழக தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் தான் படமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  

தளபதி 66 படப்பிடிப்பிற்காக விஜய் எடுத்த முக்கிய முடிவு

நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  ஒருபுறம் ரசிகர்கள் படம் எதிர்பார்த்த அளவு திருப்தியினை அளிக்கவில்லை என்று புலம்பினாலும், பல ரசிகர்கள் படத்தில் விஜயை பார்த்ததே திருப்தி தான் என்றும் கூறி வருகின்றனர்.  பீஸ்ட் பட பணிகளின் போதே 'தளபதி-66' படம் குறித்த தகவல்கள் வெளியானது.  'தோழா', 'மகரிஷி' போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான் நடிகர் விஜயை வைத்து தளபதி-66 படத்தை இயக்குகிறார், இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.

fallbacks

மேலும் படிக்க | சமந்தாவை தொடர்ந்து ஒரே பாடலில் கொடிகட்டி பறக்கப்போகும் பூஜா ஹெக்டே?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்திற்கான பூஜைகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.  பூஜையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.  இந்த படத்தில் நடிகர் சரத்குமார், பிரகாஷ்ராஜ் போன்ற மூத்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது.  'தளபதி-66' படம் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியாகவுள்ளது.  மேலும் இப்படத்தின் காட்சிகளை 70% ஹைதராபாத்தில் நடத்த படத்தின் தயாரிப்பு குழு திட்டமிட்டிருந்த நிலையில், நடிகர் விஜய் இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னையில் தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று படக்குழுவினரிடம் திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.

fallbacks

சென்னையில் படப்பிடிப்பை நடத்தினால் தான் தமிழகத்தை சேந்த FEFSI ஊழியர்கள் பயன்பெறுவார்கள், அதனால் இங்குதான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று விஜய் கூறியிருக்கிறார்.  இந்த செய்தி விஜய் ரசிகர்களையும், FEFSI ஊழியர்களையும் மகிழ்ச்சியடைய செய்திருப்பதோடு விஜய்யின் பரந்த மனசையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.  இந்த அறிவிப்பு வெளியானதும் தற்போது கிட்டத்தட்ட 100 முதல் 200 தொழிலார்கள் இணைந்து படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நடிகர் விஜயின் அறிவுறுத்தலின்படி படத்தின் முக்கியமான காட்சிகள் சென்னையிலும், ஒருசில காட்சிகள் மற்ற இடங்களிலும் படமாக்கப்படவுள்ளது.  இந்த சம்பவம் 'தளபதி-66' படத்திற்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை ஏற்படுத்தி இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கூறிவருகின்றனர்.  தளபதி 66 படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகிறது.  

மேலும் படிக்க | ஒரே ஆண்டில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 3 படங்கள்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More