Home> Movies
Advertisement

கைகுலுக்க வந்த விக்கி-கண்டும் காணாமல் சென்ற சல்மான் கான்-வைரலாகும் வீடியோ..!

Vicky Kausha-Salman Khan: பாலிவுட்டில் பிரபல நடிகர்களாக விளங்கும் விக்கி கௌஷல்-சல்மான் கான் கோபமாக உரசிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.      

கைகுலுக்க வந்த விக்கி-கண்டும் காணாமல் சென்ற சல்மான் கான்-வைரலாகும் வீடியோ..!

பிரபல பாலிவுட் நடிகர்களான விக்கி கௌஷலும் அந்த திரையுலகின் சூப்பர் ஸ்டார் என கருதப்படும் சல்மான் கானும் IIFA விழாவில் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் காரசாரமாக முறைத்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. 

IIFA விழா-பத்திரிகையாளர்கள் சந்திப்பு

பல இந்தி நட்சத்திரங்கள் பங்கேற்கும் மிகப்பெறிய விழாவான IIFA விருது வழங்கும் விழா அபுதாபியில் நடைபெறுகிறது. இதில், பாலிவுட்டை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களான விக்கி கௌஷல், சல்மான் கான், கத்ரீனா கைஃப், பூஜா ஹெக்டே, ஜெனிலியா, உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைப்பெற்றது. இதிலும் பல பிரபலங்கல் கலந்து கொண்டனர். 

மேலும் படிக்க | Aditi Rao Hydari: மஞ்சள் மேகமாக மனதை மயக்கும் அழகு நாயகி அதிதி..!

வைரல் வீடியோ:

மேற்கூறிய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, விக்கி கௌஷல் சில ரசிகர்களுடன் பேசிக்கொண்டும் செல்ஃபி எடுத்துக்கொண்டும் நிற்கிறார். அப்போது திடீரென்று வந்த சல்மான் கானின் பாதுகாவலர், வழியில் நிற்கும் விக்கி கௌஷலை இடித்துக்கொண்டு செல்கிறார். 

அடுத்து வரும் சல்மானை விக்கி கௌஷல் முறைப்பது போலவும் அவரை பதிலுக்கு சல்மான் கான் முறைப்பது போலவும் அந்த வீடியோ பதிவில் உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

சல்மான்-விக்கி மோதல்?

‘சிவனே..’ன்று நின்று கொண்டிருந்த விக்கி கௌஷலை சல்மான் கானின் பாதுகாவலர் தள்ளிவிட்டது அந்த பதிவில் நன்றாகவே தெரிகிறது. சல்மான் கானை பார்த்தவுடனேயே, விக்கி அவருடன் கைகுலுக்குவதற்காக கையை நீட்டுகிறார். ஆனால், சல்மான் கானோ அதை கண்டும் கானாதது போல் இருக்கிறார். இதனால் விக்கி கோபமடைந்து எதையோ சல்மான் கானிடம் கூறுவதும் அந்த வீடியோவில் நன்றாகவே தெரிகிறது. 

இருவருக்குள்ளும் பகையா?

விக்கி கௌஷல் கைக்குலுக்க வந்த போதும் சல்மான் கான் அதை கவனிக்காமல் போனது பலருக்கும் மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கானின் பாதுகாவல்ரும், விக்கி கௌஷலை ஏதோ ஒரு மனிதரை போல சல்மான் கான் அருகில் வரவிடாமல் தள்ளி விட்டதும் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இதையெல்லாம் தாண்டி, சல்லு பாய் இன்னொரு நடிகருக்கு மரியாதை கொடுக்காத செயல்தான் இப்போது பேசு பொருளாக இணையத்தில் உருவாகியுள்ளது. இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் ஏதாவது சொல்லப்படாத பகை இருக்குமோ என சிலர் சந்தேகித்து வருகின்றனர். 

ரசிகர்கள் கோபம்:

இணையத்தில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ரசிகர்கள் பலர், சல்மான் கான் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அவர் சக நடிகர்களுக்கு மரியாதை தருவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் சல்மான் பெண்கள் குறித்தும் ஆடை குறித்தும் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியிருந்தார். இதனால், பலரது கோபத்திற்கு இவர் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டைகர் 3 ரிலீஸ்:

பாலிவுட் ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம், டைகர் 3. இந்த படத்தில் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். இதன் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி, சல்மான் கான் தான் கலந்து கொண்ட IIFA விழாவில் அந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், டைகர் 2 படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | 2ஆவது திருமணம் செய்துகொண்ட ‘கில்லி’ நடிகர்- முன்னாள் மனைவி வெளியிட்ட பரபரப்பு பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More