Home> Movies
Advertisement

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் "வேலைக்காரன்" !!

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் "வேலைக்காரன்". 

எதிர்பார்ப்பை எகிற வைக்கும்

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் "வேலைக்காரன்". 

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதுமட்டுமின்றி, அனிருத்தின் இசையில் உருவான 'இறைவா' என்ற பாடல் ஏற்கனவே சுப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையிலும், இந்த படத்தின் மற்ற மூன்று பாடல்களும் கோலாகலமாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. 

இந்நிலையில் பிரபல திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. 

Read More