Home> Movies
Advertisement

ஆகஸ்ட் 28 'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

ஆகஸ்ட் 28 'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஆகஸ்ட் 28-ம் வெளியாக உள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'. 

ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும் படத்தின் டீசர் வெளியப்பட்டது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மாலை 6 மணிக்கு வெளியிட படகுழு தீர்மானித்துள்ளது.

 

 

செப்டம்பர் 29-ம் தேதி இப்படம் ரிலீஸ் என்று குறிப்பிடத்தக்கது.

Read More