Home> Movies
Advertisement

ஜெயம் ரவியின் 'வனமகன்' படத்தின் டீசர் வெளியீடு!!

ஜெயம் ரவியின் 'வனமகன்' படத்தின் டீசர் வெளியீடு!!

இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் 'வனமகன்' படத்தின் டீசர் இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'போகன்'. படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அப்படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கத்தில் 'வனமகன்' மற்றும் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் 'டிக் டிக் டிக்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி.

இப்படங்களில் 'வனமகன்' படத்தின் பணிகள் பெரும்பாலானவை முடிந்துவிட்டது. சாயிஷா சைகல் நாயகியாக நடித்து வரும் இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

'வனமகன்' படத்தில் ஜெயம் ரவியின் லுக் அடங்கிய போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

Read More