Home> Movies
Advertisement

வலிமை டிரெய்லர் இன்று வெளியாகிறது: அசத்தலாக வரவேற்க தயாராகும் அஜித் ரசிகர்கள்

வலிமை படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்தது முதலே ரசிகர்களிடையே துவங்கிய ஆவல் தற்போது மிகப்பெரிய அலையாய் மாறியுள்ளது.

வலிமை டிரெய்லர் இன்று வெளியாகிறது: அசத்தலாக வரவேற்க தயாராகும் அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்களுக்கு மாஸ் செய்தி!! நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நாள் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. அஜித் நடிக்கும் வலிமை படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. வலிமை பட டிரெய்லரை அசத்தலாக வரவேற்க தயாராகி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் (Tamil Cinema) தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் நடிகர் அஜித் குமார். இவரை இருடைய ரசிகர்கள் வேற லெவவில் வைத்து கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணமும் உண்டு. சம கால நடிகர்களில் மிகவும் வித்தியாசமான, நேர்த்தியான நடிகர்களின் ஒருவராகவே இதுவரை நாம் நடிகர் அஜித்தை பார்த்து வருகிறோம்.

சமீப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் அல்லாது, இந்தியா மற்றும் உலக அளவிலும் கூட மிக அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துயுள்ள படம் அஜித் கதாநாயகனாக நடிக்கும் 'வலிமை' திரைப்படம். படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்தது முதலே ரசிகர்களிடையே துவங்கிய ஆவல் தற்போது மிகப்பெரிய அலையாய் மாறியுள்ளது.

வலிமை (Valimai) படத்தைப் பற்றிய மிகச்சிறிய செய்தியும் சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகாமல் இருப்பதில்லை. இன்னும் சில நாட்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இது குறித்த ஆர்வம் மிக அதிகமாகி வருகின்றது. இந்த நிலையில், இன்று மாலை வலிமை படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் (Actor Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாக்யுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். கார்த்திகேயா கும்மகொண்டா, குர்பானி நீதிபதி, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத் குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரகளில் நடித்துள்ளனர். 

ALSO READ | இது வலிமை படத்தின் வேற மாதிரி அப்டேட்: சூடு பிடிக்கும் பட ரிலீஸ்

ALSO READ | தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகும் 'வலிமை'!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More