Home> Movies
Advertisement

ஹிந்தி, தெலுங்கில் வெளியான Valimai -ன் மிரட்டலான போஸ்டர்..!

பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ள வலிமை படத்தின் மிரட்டலான தெலுங்கு மற்றும் ஹிந்தி போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹிந்தி, தெலுங்கில் வெளியான Valimai -ன் மிரட்டலான போஸ்டர்..!

வலிமை அப்பேட் கேட்டு வருஷக்கணக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த வாரம், போதும் போதும் என்கிற வகையில் தொடர்ந்து அப்டேட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது படக்குழு. அண்மையில் வெளியிடப்பட்ட வலிமை டிரெய்லரில் இடம்பெற்றிருந்த காட்சிகள்,  படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது. வில்லன்களை பிடிக்க அஜித் செய்யும் பைக் ரேஸ் காட்சிகள், டிரெய்லரிலேயே மெய்சிலர்க்க வைத்துள்ளதால், படத்தில் இடம்பெற்றிருக்கும் அந்தக் காட்சியைக் காண ரசிகர்கள் தவமிருந்து வருகின்றனர்.

fallbacks

ALSO READ | வலிமை ரிலீஸ் தேதி - மீண்டும் உறுதிபடுத்திய தயாரிப்பாளர்!

பொங்கல் விருந்தாக ஜனவரி 13 ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா அதிகரிப்பால் வலிமை திட்டமிட்டபடி ரிலீஸாகுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது. ஏனென்றால், தியேட்டர்களில் 50 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்ததால், வசூல் ரீதியாக ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு படக்குழு அந்த முடிவை எடுக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், தயாரிப்பாளர் போனிக்கபூர், திட்டமிட்டப்படி வலிமை ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாகும் என மீண்டும் ஒருமுறை அறிவித்தார். 

fallbacks

ALSO READ | ’வெந்து தணிந்தது காடு’ சூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்..!

fallbacks

இந்நிலையில், ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகும் வலிமை படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களும் மிரட்டலாக இருக்கின்றன. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யா, வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். மேலும், இப்படம் பிளாக்பஸ்டராக இருக்கும் என்று கூறியுள்ள அவர், வலிமை குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதேபோல், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் வலிமை படத்தின் தெலுங்கு ஃபர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்து, வலிமை குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஹிந்தியிலும் வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

fallbacks

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More