Home> Movies
Advertisement

வலிமை ரிலீஸ் தேதி - மீண்டும் உறுதிபடுத்திய தயாரிப்பாளர்!

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.  

வலிமை ரிலீஸ் தேதி - மீண்டும் உறுதிபடுத்திய தயாரிப்பாளர்!

தனது எதார்த்தமான மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பேரும், புகழும் பெற்று முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித் (Ajith).  இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற ஹீரோக்களின் ரசிகர்களையும் கூட எதிர்பார்க்க வைத்த ஒரு படம் என்றால் அது 'வலிமை' படம் தான்.  ரசிகர்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைபிரபலங்கள் என பலரும் இப்படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து தவம் கிடந்தனர்.

fallbacks

நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை.  போனி கபூர் தயாரிப்பில் உருவாக்யுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். கார்த்திகேயா கும்மகொண்டா, குர்பானி நீதிபதி, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான இரண்டு பாடல்கள், தீம் மியூசிக், கிலிம்ஸ் அனைத்தும் ரசிகர்களிடம் படம் பார்க்கும் ஆவலை தூண்டியது.

 

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் ட்ரைலரை கண்டு திரை பிரபலங்கள் பிரபலங்கள் பலரும் மிரண்டு போயினர், பைக் ரேஸ் காட்சிகள் பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.  ஆரம்பத்தில் இப்படம் குறித்த அப்டேட்டை வெளியிடாத படக்குழு சமீப காலமாக அப்டேட் மேல் அப்டேட்டாக கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.  ஏற்கனவே இப்படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து வைக்கும் விதமாக ஜனவரி 13-ம் தேதியன்று ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில் வலிமை படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில், ஜனவரி 13, 2022 அன்று பிரம்மணடமாக வெளியிடப்படும் என்று பதிவிட்டுள்ளார்.  வலிமை படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ | 'ராதே ஷியாம்' படத்திற்கு ரூ.350 கோடி ஆபர் குடுத்த பிரபல OTT நிறுவனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More