Home> Movies
Advertisement

வலிமை - அண்ணாத்த ஒரே நாளில் ரிலீஸ்? உண்மை நிலவரம் இதோ!

அஜித்தின் வலிமை படமும் ரஜினியின் அண்ணாத்த படமும் ஒரே நாளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை - அண்ணாத்த ஒரே நாளில் ரிலீஸ்? உண்மை நிலவரம் இதோ!

கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு தற்போது திரையரங்கு திறக்கப்பட்டு அடுத்தது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.  அதிக பொருட்செலவில் உருவான படங்கள் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டுகளுக்கு தள்ளிப் போகின்றன.  இதையடுத்து தமிழில் அடுத்து வெளியாகவிருக்கும் பெரிய படங்கள் அஜித்தின் வலிமை மற்றும் ரஜினியின் அண்ணாத்த. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

fallbacks

annathe

இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் 2019ல் பொங்கல் தினத்தில், ரஜினியின் பேட்டை திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் இம்முறை ஒரே நாளில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளதால் அதனுடன் போட்டியிட வேண்டாம் என்று அஜித் நினைப்பதாக கூறப்படுகிறது.  இருப்பினும் வலிமை படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.  எனினும் வலிமை தீபாவளி தினத்தில் வெளியாக வாய்ப்பு குறைவு என்றும்,  அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே திரையரங்கில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் அஜித் மற்றும் ரஜினி இருவரது அடுத்த படங்களையும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படங்களின் இயக்குனர்களே இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More