Home> Movies
Advertisement

லண்டனுக்கு பறந்த வடிவேலு; வைரலாகும் புகைப்படம்!

வடிவேலு லண்டனில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

லண்டனுக்கு பறந்த வடிவேலு; வைரலாகும் புகைப்படம்!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக வடிவேலு திரைப்படங்களில் சரியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு (Vadivelu) நடித்து வரும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ் (Naai Sekar Returns).

ALSO READ | Original! original original! வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும், மேலும் ஷிவாங்கி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடல்கள் கம்போசிங் செய்ய படக்குழுவினர் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இதில் சந்தோஷ் நாராயணன், வடிவேல், சுராஜ் ஆகியோர் பாடல் கம்போசிங் பணிகள் தற்போது இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார்.

fallbacks

முன்னதாக இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | இணையத்தில் வைரலாக்கும் வடிவேலுவின் பிறந்தநாள் கொண்டாட போட்டோஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More