Home> Movies
Advertisement

சிம்புவுடன் திரிஷா திருமணமா? உண்மை என்ன? யார் காரணம்...

சிம்பு, திரிஷாவை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக தனியார் நிறுவனம் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

சிம்புவுடன் திரிஷா திருமணமா? உண்மை என்ன? யார் காரணம்...

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு (Simbu) மற்றும் திரிஷா (Trisha) நடித்த படம் விண்ணை தாண்டி வருவாயா. இந்த படம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. செம ரொமான்டிக் படங்களில் ஒன்றாக இந்த படத்தை பார்க்கப்பட்டது. இந்த இரு நடிகர்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

சமீப காலங்களில் சிம்புவின் திருமணம் தொடர்பாக பல யூகங்களைத் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சிம்பு (Simbu) , திரிஷாவை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

 

ALSO READ | மீண்டும் உருவாகும் ‘அவள் அப்படித்தான்’; ஸ்ருதி, சிம்பு மற்றும் துல்கர் உடன் பேச்சுவார்த்தை!

fallbacks

(MOVIE STILLS)

 

ALSO READ | வைரலாகும் ‘கார்த்திக் டயல் செய்த எண்’; சமூக ஊடகங்களில் பறக்கும் மீம்ஸ்...

முன்னதாக நடிகை திரிஷா (Trisha) 5 ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியனோடு எங்கேஜ்மென்ட் கூட நடத்திக் கொண்டு திருமணத்தை கேன்சல் செய்தார். அதன்பின் சிறிது ஆண்டுகள் திருமண எண்ணத்தை ஒதுக்கி வைத்திருந்தார்.

தென்னிந்திய திரை உலகை கடந்த 18 ஆண்டுகளாக ஆண்டு வரும் தெலுங்கு தமிழ் மொழிகளில் உள்ள அனைத்து உயர் ஹீரோக்களுடனும் ரொமான்ஸ் செய்த திரிஷா (Trisha) கடந்த சில காலமாக சினிமாக்களை குறைத்துக்கொண்டார். அதனால் இவருடைய பார்வை திருமணத்தின் மீது விழுந்தது என்றும் அதனால்தான் சினிமாக்களை குறைவாக செய்து வருகிறார் என்றும் வெளி வட்டாரங்கள் தெரிவித்தது. 

Read More