Home> Movies
Advertisement

ஏகே அஜித் என்ட்ரி.... திருவிழாக்கோலம் ஆன திருச்சி

திருச்சிக்கு அஜித் சென்றதையடுத்து ரசிகர்கள் பலர் அஜித்தை பார்க்க முண்டியடித்தனர்.

 ஏகே அஜித் என்ட்ரி.... திருவிழாக்கோலம் ஆன திருச்சி

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் அஜித் ஒருவர். தன் தொழில் நடிப்பது மட்டும்தான் அதை விடுத்து எதுவும் இல்லை என்ற கொள்கையில் இருப்பவர் அஜித். பொதுவாக வெளிகளில் தலை காட்டாத அஜித்தை ஸ்க்ரீனில் மட்டும்தான் பார்க்கமுடியும். அதுமட்டுமின்றி தனது ரசிகர் மன்றத்தையும் தைரியமாக கலைத்தவர் அஜித். மன்றங்கள் கலைக்கப்பட்ட பிறகு அஜித்துக்கு சேரும் கூட்டம் குறைந்துவிடும் என்று கருதிய கோடம்பாக்கம்; அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகு வெளியான மங்காத்தா படத்துக்கு கிடைத்த ஓப்பனிங்கை பார்த்து பிரமித்தது. 

அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். தற்போது அப்படத்தின் ஷூட்டிங் தமிழ்நாட்டில் நடக்கிறது. எனவே தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ளார் அஜித்.

 

இந்நிலையில், 47ஆவது மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 25ஆம் தேதி திருச்சி கே.கே.நகரில் உள்ள ரைபிள் கிளப்பில் தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 1,300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். பிஸ்டல் துப்பாக்கிச் சுடுவதற்கான போட்டிகள் 28ஆம் தேதிவரையும், 29, 30, 31ஆம் தேதிவரை ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அஜித்? வெளியான சஸ்பென்ஸ்

இதனிடையே, துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஆர்வம் காட்டி வரும் அஜித், இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை திருச்சி வந்தார். இதனால், போட்டி நடைபெறும் இடத்தில் அஜித்தைக் காண ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். தமிழகம் முழுவதிலிருந்தும் கிளம்பி திருச்சிக்கு வந்த ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறினர். இதையடுத்து மாடியிலிருந்து ரசிகர்களை நோக்கி நடிகர் அஜித் கைகாட்டி வணக்கம் வைத்தார். தற்போது அந்த வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | கையில் வில்லுடன் தனுஷ் - வைரலாகும் நானே வருவேன் ஃபர்ஸ்ட் லுக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More