Home> Movies
Advertisement

2023ல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள்!

Top 10 Movies: 2023ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது.  இந்நிலையில் இந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படங்களை பற்றி பார்ப்போம்.  

2023ல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள்!

2023ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது.  பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை நிறைய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது.  விஜய்யின் லியோ, வாரிசு, ரஜினியின் ஜெயிலர், பிரபாஸின் சலார் போன்ற படங்கள் புதிய ரெக்காடை படைத்துள்ளன. இந்த வருடத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த படங்களை பற்றி பார்ப்போம்.

சிறந்த தமிழ் படங்கள்

சித்தா (Chiththa)

இயக்குனர் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த், சஹஸ்ர ஸ்ரீ நடிப்பில் வெளியான படம் சித்தா. குழந்தை வன்கொடுமை பற்றி பேசும் முக்கியமான படம் இது ஆகும். சித்தார்த்தின் அற்புதமான நடப்பில் திரையரங்கு மற்றும் ஓடிடி என இரண்டிலும் வெற்றி பெற்றது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் படத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க | பிரபாஸ்க்கு தொடரும் சோகம்! தமிழகத்தில் சலாரின் வசூல் இவ்வளவு தானா?

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X)

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் ஜிகர்தண்டாவின் முன்னோட்டம் ஆகும்.  தீபாவளியை ஒட்டி படம் வெளியான பிறகு அதிக ரசிகர்களை ஈர்த்தது.  நெட்ஃபிலிக்ஸில் இந்த படத்தை பார்க்கலாம்.

போர் தொழில் (Por Thozhil)

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான படம் போர் தோழில். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சுவாரஸ்யமான க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்தது.  ராட்சசன் படத்திற்கு பிறகு தமிழில் சிறந்த திரில்லர் படம் இது ஆகும்.  SonyLIV தளத்தில் படத்தை பார்க்கலாம்.

விடுதலை: பகுதி 1 (Viduthalai: Part 1)

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான படம் 'விடுதலை: பாகம் 1'. இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். போலீஸால் மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை பற்றி படம் பேசியது.  Zee5 தளத்தில் படத்தை பார்க்கலாம்.

டாடா (Dada)

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் டாடா.  இளைஞர்களை கவரும் விதத்தில் படம் அமைந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது.  பிரைம் வீடியோவில் பாடத்தை பார்க்கலாம்.  

குட் நைட் (Good Night)

விநாயக் சந்திரசேகரன் எழுதி இயக்கிய ஒரு பீல் குட் படம் குட் நைட்.  இந்த படத்தில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக் மற்றும் ரைச்சல் ரபேக்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் படத்தை பார்க்கலாம்.  இந்த படங்கள் தவிர சிவகார்த்திகேயனின் மாவீரன், விஜய் நடித்துள்ள லியோ,  ரஜினி நடித்துள்ள ஜெயிலர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்: பாகம் 2, அஜித் நடித்துள்ள துணிவு போன்ற மாஸ் படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது.  

சிறந்த தெலுங்கு படங்கள்

ஸ்ரீகாந்த் நாகோதி இயக்கியிருக்கும் மந்த் ஆஃப் மது, சாய் ராஜேஷ் இயக்கத்தில் பேபி, கார்த்திக் வர்மா இயக்கிய விருபாக்ஷா, வேணு யாலண்டி இயக்கிய பாலகம், கல்யாண் ஷங்கர் இயக்கிய மேட், ராம் அப்பாராஜு இயக்கிய சமஜவரகமனா, இயக்குனர் ஷௌர்யுவின் ஹாய் நன்னா, பிரசாந்த் நீல் இயக்கிய சலார், ரீகாந்த் ஒடேலா இயக்கி தசரா போன்ற படங்கள் தெலுங்கு ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது.

மேலும் படிக்க | கோலிவுட் நாயகிகளின் வீட்டில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More