Home> Movies
Advertisement

துணிவு - இரட்டை வேடமா நெகட்டிவ் ரோலா?... ஹெச். வினோத் ஓபன் டாக்

துணிவு படத்தில் அஜித் நடிப்பது இரட்டை வேடமா, நெகட்டிவ் ரோலா என்பது குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மனம் திறந்துள்ளார்.

துணிவு - இரட்டை வேடமா நெகட்டிவ் ரோலா?... ஹெச். வினோத் ஓபன் டாக்

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்திருக்கிறார். படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இதில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. அஜித்தும், வினோத்தும் இணைந்த முதல் இரண்டு படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. அதற்கு காரணம் சிலரின் தலையீடு படத்தில் இருந்ததாகவும் அதனால்தான் அவ்வாறு ரிசல்ட் வந்ததாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் அந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றன என்பதை மறுக்க முடியாது. எனவே துணிவு படத்துக்கு எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக எழுந்துள்ளது. மேலும், பொங்கல் தினத்தன்று வாரிசு படமும் வெளியாகவிருப்பதால் பொங்கலுக்கு துணிவா, வாரிசா என்ற போட்டி தற்போதே உருவாகி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இதற்கிடையே துணிவு படமானது வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் துணிவு எப்படிப்பட்ட படம் அதில் அஜித் ரோல் என்ன என்பவை குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ அஜித் துணிவு படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு நான் ஆம் என சொன்னால், அப்போ மங்காத்தாவானு கேட்பார்கள். அவர்களின் கற்பனையை கொட்டுவதுதான் பிரச்னையே. ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விருப்படுகிறேன். ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்துமே இந்தப் படத்தில் இருக்கும்.

fallbacks

அதேபோல் அஜித் இதில் இரட்டை வேடமா என்று கேட்கிறார்கள். இந்த கேரக்டர் மிஸ்ட்ரியாகவே (மர்மம்) இருக்கட்டுமே. சமூக வலைதளங்களில் உருவாகும் கற்பனைகள் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை பார்த்துவிட்டு படத்துக்கு வருவது நல்லது. துணிவு படம் வங்கிக்கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். வங்கி செட் போடப்பட்டது அவ்வளவே. அயோக்கியர்கள் ஆடும் ஆட்டம்தான் துணிவு” என்றார்.

மேலும் படிக்க | துணிவு படம் உருவானது இப்படித்தான் - இயக்குனர் ஹெச்.வினோத்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More