Home> Movies
Advertisement

டாப் 10 தமிழ் சீரியல்கள்! முதல் இடத்தில் இருக்கும் தொடர் எது தெரியுமா?

Top 10 Tamil Serials TRP Ratings : தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த தொடர் முதல் இடத்தில் இருக்கிறது தெரியுமா?   

டாப் 10 தமிழ் சீரியல்கள்! முதல் இடத்தில் இருக்கும் தொடர் எது தெரியுமா?

Top 10 Tamil Serials TRP Ratings : தமிழ் திரையுலகிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனரோ அதே போல தொலைக்காட்சி தொடர்களுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இல்லத்தரசிகளின் மனங்களை மட்டும் கவர்ந்து வந்த தாெடர்கள், தற்போது இளைஞர்கள், வயதானவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் போற்றும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. குடும்பக்கதை, காதல் கதை, கல்யாண கதை என ஒரு கதம்பமாக இருக்கும் தொலைக்காட்சி சீரியல்களின் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. இதில், எந்த தொடருக்கு அதிக டி.ஆர்.பி? எந்த தாெடர் ரசிகர்களின் மனங்களை அதிகமாக கவர்ந்துள்ளது, இதையெல்லாம் இங்கு பார்ப்போம். 

10.ஆஹா கல்யாணம்:

கடைசி இடத்தில் இருக்கும் தொடர், ஆஹா கல்யாணம். பிடிக்காத/எதிர்பார்க்காத இருவர் திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்? இதைத்தான் இந்த தொடரில் கதையாக எடுத்திருக்கின்றனர். ஆரம்பித்த சில காலங்களிலேயே மக்கள் மனம் கவரந்த தொடர் இது. இந்த தொடரை, தளபதி நடிகரின் பெயர் கொண்ட சேனலில் பார்க்கலாம். இத்தொடர் பெற்றிருக்கும் டி.ஆர்.பி ரேட்டிங் 5.59 ஆகும். 

9.பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

தமிழ் தொலைக்காட்சிகளுள் வெற்றி பெற்ற தொடர், பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஒரு சில பழைய கதாப்பாத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடர் பெற்றுள்ள டி.ஆர்.பி, 6.55 ஆகும். 

8.சுந்தரி சீரியல்:

மக்களின் மனம் கவர்ந்த சிம்பிளான தொடர்களுள் ஒன்று சுந்தரி. ‘சூர்ய’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில்  காப்ரியல்லா நாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஜிஷ்னு மேனன் நடித்து வருகிறார். சமூகத்தின் பார்வையில் அழகின்மையாக பார்க்கப்படும் ஒரு பெண்ணின் பிரச்சனைகளை சொல்லும் கதையாக எடுக்கப்பட்ட சீரியல், சுந்தரி. இந்த தொடர் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் பெற்றிருக்கும் டி.ஆர்.பி 6.77 ஆகும். 

7.பாக்கியலக்‌ஷ்மி:

சில ஆண்டுகளுக்கு முன்னர் பலரது இல்லங்களில் தவறாமல் ஒளிபரப்பாகி வந்த தொடர், பாக்கியலக்‌ஷ்மி. கணவன், குடும்பம் போன்ற அனைவராலும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத குடும்ப தலைவியின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட தொடர், பாக்கியலக்‌ஷ்மி. இந்த தொடர் 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் வாங்கியிருக்கும் டி.ஆர்.பி 6.78 ஆகும். 

மேலும் படிக்க | சன் டிவி சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

6.மல்லி சீரியல்:

இந்த ஆண்டு புதிதாக ஆரம்பித்திருக்கும் தொடர் மல்லி. இதில் விமல் வெங்கடேசன், நிகிதா ராஜேஷ், நளினி, பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் நடித்து வரும் தொடர் இது. இந்த தொடர் 6.93 டி.ஆர்.பி ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. 

fallbacks

5.சிறகடிக்க ஆசை:

சமீப காலமாக மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த தொடரில் கோமதி பிரியா, வெற்றி வசந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த தொடர் பெற்றிருக்கும் டி.ஆர்.பி ரேட்டிங் 7.94 ஆகும். 

4.வானத்தை போல:

சூர்ய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், வானத்தைப்போல. இந்த தொடர், கடந்த வாரம் 3வது இடத்தில் இருந்தது. இம்முறை இத்தொடர் பெற்றிருக்கும் தொடர் 4 ஆகும். டி.ஆர்.பி ரேட்டிங் 8 புள்ளிகள்.

3.மருமகள்:

3வது இடத்தை பெற்றிருக்கும் தொடர் மருமகள். இதில் நவின் குமார், பானுமதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த தொடர் 8.12 புள்ளிகளை பெற்றிருக்கிறது. 

2.கயல்:

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர், கயல். 2வது இடத்தை பெற்றிருக்கும் தொடர், மொத்தம் 9.23 புள்ளிகளை பெற்றிருக்கிறது. 

1.சிங்க பெண்ணே:

சூர்ய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், சிங்க பெண்ணே. இந்த தொடர், பெற்றிருக்கும் டி.ஆர்.பி. புள்ளிகள் 9.29 ஆகும்.

மேலும் படிக்க | 42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More