Home> Movies
Advertisement

அர்ஜுனின் மகளுக்கு வருங்கால மாமனார் தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

Aishwarya Arjun Engagement: அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

அர்ஜுனின் மகளுக்கு வருங்கால மாமனார் தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வளம் வருபவர், அர்ஜூன். சமீபத்தில் வெளியான லியோ படத்தில் ஹரால்டு தாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவரை ரசிகர்கள் ‘அக்ஷன் கிங்’ அர்ஜூன் என்று அழைப்பதுண்டு.  முன்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர், சில ஆண்டுகளுகளாகவே தமிழ் ஹீரோக்களுக்கு வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். இவரது மகள் ஐஸ்வர்யாவும் சில படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். 

அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா:

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர்களாக இருப்பவர்களின் வாரிசுகளும் திரையுலகிற்குள் பிரவேசிப்பதுண்டு. அந்த வகையில், தனது தந்தையை தொடர்ந்து கோலிவுட்டில் நடிக்க வந்தவர், ஐஸ்வர்யா அர்ஜூன். விஷால் நடிப்பில், கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘பட்டத்து யானை’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆனால், அதன் பிறகு இவர் பெரிதாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஐஸ்வர்யாவின் தந்தையை ஏற்றுக்கொண்ட தமிழ் ரசிகர்களால் ஏனோ அவரது மகளை நடிகையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவே, அவர் படங்களில் நடிக்காமல் போனதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஜவான் to ரத்தம்-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?

தம்பி ராமையாவின் மகனுடன் நிச்சயதார்த்தம்:

அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் பிரபல குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் குறித்த தகவல் கடந்த ஜூன் மாதமே பரவியது. ஐஸ்வர்யா மற்றும் உமாபதி ஆகியோருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. 

நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் இந்த நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். 

காதல் வளர்ந்தது எப்படி? 

நடிகர் அர்ஜுன் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சர்வைவர்’ என்ற ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தினார். இதில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவும் இந்த கேம் ஷோவில் கலந்து கொண்டார். அப்போது தனது தந்தையை பார்க்க ஐஸ்வர்யா அடிக்கடி அந்த ஷோவின் செட்டிற்கு விசிட் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது உமாபதியை அவர் சந்தித்ததாகவும், இருவருக்கும் இடையே அப்படியே காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

உமாபதி ராமையா தனது தந்தையுடன் இணைந்து மணியார் குடும்பம் என்ற படத்தில் நடித்துள்ளார். அதற்கு முன்னர் அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து திருமணம், தண்ணி வண்டி, ராஜாகிளி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

கண்டீஷன் போட்ட தம்பி ராமையா:

தம்பி ராமையா, தனது மகன் திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஐஸ்வர்யாவிற்கு அதாவது, தனது வருங்கால மருமகளுக்கு இப்போதே சில கண்டீஷன் போட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த தகவல்களின் படி, ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகும் நடிக்க வரக்கூடாது என அவர் கண்டீஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஐஸ்வர்யாவிற்கு 28 வயதும் உமாபதிக்கு 31வயதும் ஆவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! திரையுலகினர்-ரசிகர்கள் சோகம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More