Home> Movies
Advertisement

Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?

Thalapathy 69 Latest Update : நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்கும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.   

Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?

Thalapathy 69 Latest Update : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கிட்டத்தட்ட 30 வருடங்களாக தென்னிந்திய அளவில் அதிக அளவு ரசிகர் கூட்டம் கொண்ட நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மூலமாக சினிமாவிற்கு வந்திருந்தாலும், தற்போது தனக்கென தனி அடையாளத்தை கோலிவுட்டில் உருவாக்கியிருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கியுள்ள இவர் சினிமாவிற்கு முழுமையாக டாட்டா சொல்ல இருக்கிறார். இவர் கடைசியாக நடிக்கும் படம் தான் தளபதி 69. 

கோட் திரைப்படம்: 

வெங்கட் பிரபுவும் விஜய்யும் முதன்முதலாக இணைந்திருக்கும் படம் GOAT (The Greatest Of All Time). பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் டைம் டிராவல் கதையை வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் விஜய் இரு வருடங்களில் நடிப்பதாகவும் ஒருவர் எதிர்காலத்திலிருந்து வந்த விஜய் ஆகவும் இன்னொருவர் நிகழ்காலத்தில் இருந்து இருக்கும் விஜய் ஆகவும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

இந்த படம் ஆங்கிலத்தில் வெளிவந்த ஜெமினி மேன் படத்தின் கதைதான் என்றும் கூறப்படுகிறது. இதில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜயின் பிறந்தநாள் வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி படத்தின் பெரிய அப்டேட் ஏதேனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!

தளபதி 69: 

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சியை தொடங்கிய போது, தான் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். இதையடுத்து, தான் தற்போது கமிட் ஆகி இருக்கும் படங்களில் நடித்து முடித்தவுடன் முழு நேர அரசியலில் இறங்குவதாகவும், அதன் பிறகு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். 

விஜய் இனி திரை உலகில் இருக்கப் போவதில்லை என்று அறிந்த ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் வாழ்ந்தாலும் அவரது இறுதிப் படமாவது வெளியாகும் என்று ஆறுதல் அடைந்தனர். கோட் படத்திற்குப் பிறகு அவர் ஒரு படத்தில் நடிப்பதாகவும் அத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாகவும் தகவல்கள் வெளியானது. அதுதான் தளபதி 69. இந்த படத்தை இயக்கப் போகும் நபர் யார் என்பது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், ஹெச். வினோத் இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்று திரை வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது. விஜய்க்காக அவர் ஒரு அரசியல் கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும், பல இயக்குனர்களிடம் கதை கேட்டு அதன் பின்னர்  ஹெச்.வினோத் சொன்ன கதைக்கு விஜய் ஓகே சொல்லி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஷூட்டிங் எப்போது?

தளபதி 69 படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. வரும் அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் ட்ராப் ஆகி விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் அதற்கு மாறுபட்டு உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | தளபதி 69-ல் 3 நாயகிகளா?! ஒன்று த்ரிஷா, இன்னொன்று சமந்தா 3வது யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More