Home> Movies
Advertisement

Thalaivar 168: மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை!

சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 168’ படத்தில் பிரபல நடிகை ரஜினியுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

Thalaivar 168: மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை!

சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 168’ படத்தில் பிரபல நடிகை ரஜினியுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

ரஜினி நடிப்பில் தற்போது ‘தர்பார்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளளார்.

இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை மீனா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்குமுன் நடிகை மீனா ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த், எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட ஆகிய படத்தில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைய இருக்கிறார்.

Read More