Home> Movies
Advertisement

நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்: இப்பவே வேண்டும்.. மனோகரிக்கு வந்த மிரட்டல்..

Ninaithen Vandhai Today (2.8.2024) Episode:  இன்றைய "நினைத்தேன் வந்தாய்" சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்: இப்பவே வேண்டும்.. மனோகரிக்கு வந்த மிரட்டல்..

Tamil Serial Ninaithen Vandhai Latest Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரியும் அவளது அப்பாவும் பேசிய விஷயங்கள் அனைத்தும் இந்து கேட்டு விட மனோகரின் உண்மை முகம் தெரிய வந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, இந்து இருவரையும் அடித்து ஓட விடுகிறாள், அதன் பிறகு கீழே இறங்கி வர குழந்தைகளும் சுடரும் சந்தோசமாக விளையாடி கொண்டிருக்கின்றனர். இதை பார்த்த இந்து இந்த சந்தோசம் எப்பவும் இப்படியே நிலைக்கணும். இந்த மனோகரி நினைக்கிறதை நடக்க விட கூடாது என்று முடிவெடுக்கிறாள்.

அடுத்து அஞ்சலி கீழே விழுந்து விட சுடர் பதறி ஓடி போய் அவளை கவனித்து கொள்கிறாள். இதையடுத்து வீட்டிற்கு வந்த இந்து தீபாவிடம் அஞ்சலி கீழே விழுந்ததை நினைத்து வருத்தப்படுகிறாள். அடுத்த நாள் காலையில் சுடரிடம் வந்து என் குழந்தை எப்படி இருக்கா என்று கேட்டு விடுகிறாள்.

சுடர் உங்க குழந்தையா என்று கேட்க இந்து நேத்து குழந்தை கீழே விழுந்துட்டாலே அதை கேட்டதாக சொல்லி சமாளிக்கிறாள். அடுத்து ரூம் பாய் மனோகரிக்கு போன் செய்து என்னுடைய போன் இப்பவே வேண்டும் என்று மிரட்டுகிறான். மனோகரி திமிர் காட்ட ரூம் பாய் வீட்டுக்கு வந்து உண்மையை சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறான்.

இதனால் மனோகரி அந்த போனை எடுக்க போக சுடர் மற்றும் ராமையா இதை பார்த்து அவளை பின் தொடர்கின்றனர். மனோகரி போனை எடுப்பதை பார்த்து அவளை பின் தொடர்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்: டான்ஸ் கேக்குதா உனக்கு, மாய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More