Home> Movies
Advertisement

அக்டோபர் 7-ம் தேதி வெளியாகிறது 'தேவி'

அக்டோபர் 7-ம் தேதி வெளியாகிறது 'தேவி'

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்திருக்கும் 'தேவி' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி, சோனு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தேவி'. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை விஜய் இயக்கி இருக்கிறார். பிரபுதேவா தயாரித்திருக்கும் இப்படத்தை ஆரோ சினிமாஸ் வெளியிட்டு இருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்படம் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

Read More