Home> Movies
Advertisement

சமந்தா to தனுஷ்-தென்னிந்திய திரையுலகை அதிர வைத்த விவாகரத்து செய்திகள்..!

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த சில நடிகர்-நடிகைகளின் விவாகரத்து செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிலும் சிலர், திருமணமாகி சில வருடங்களுக்குள்ளாகவே விவாகரத்து செய்து கொண்டனர். 

சமந்தா to தனுஷ்-தென்னிந்திய திரையுலகை அதிர வைத்த விவாகரத்து செய்திகள்..!

திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பலர் காதலில் விழுவதும், அவை திருமணம் வரை செல்வதும் சகஜமான ஒன்று. அதே போல அவர்கள் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே அந்த வாழ்க்கையை விட்டு விலகி விவாகரத்து பெறுவதும் சகஜமாகி விட்டது. ஆனால், இவர்களின் விவாகரத்து செய்தி, சம்பந்தப்பட்டவர்களை பெரிதாக பாதிப்பதை விட, அவர்களின் ரசிகர்களை மிகவும் பாதித்து விடுகிறது. அப்படி, ரசிகர்களை அதிர வைத்த நடிகர்-நடிகைகளின் விவாகரத்துகளை இங்கு பார்ப்போம். 

சமந்தா-நாக சைதன்யா:

தென்னிந்திய திரையுலக ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடி, சமந்தா-நாக சைதன்யா. இருவரும் கிட்டத்தட்ட தங்களது சினிமாவின் ஆரம்ப கால வாழ்க்கையில் இணைந்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருந்தனர். அப்போதில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். இருவரும் வெவ்வேறு படங்களில் நடித்துக்கொண்டிருந்த போது, வெவ்வேறு நடிகர்-நடிகைகளை காதலித்து வந்தனர். மஜ்லி, மனம் என சில படங்களில் ஒன்று சேர்ந்து நடித்த இவர்கள் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2021ஆம் ஆண்டு தாங்கள் விவாகரத்து பெற உள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். 

இவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகி விட்டாலும், ரசிகர்கள் இதிலிருந்து மீண்டது போல தெரியவில்லை. இவர்களின் திருமணத்தின் போது எடுத்த வீடியோக்களும், போட்டோக்களும் இன்றளவும் காதல் ஜோடிகள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | உலகின் பணக்கார நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர்! யார் அவர்?

ஐஸ்வர்யா-தனுஷ்:

மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட ஜோடி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ். 2003ஆம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமான இவர்கள், காதல் வயப்பட்டனர். இரு வீட்டாரும் இணைந்து இந்த ஜோடிக்கு 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தாங்கள் ஒரு மனதாக விவாகரத்து செய்து கொள்வதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். 

பிற செலிபிரிட்டி ஜோடிகள் போல அன்றி, இவர்கள் ஒன்றாக உள்ள புகைப்படங்களோ, வீடியோக்களோ பெரிதாக வெளி வந்ததில்லை. இருப்பினும் தமிழ் திரையுலகில் மிக நீண்ட வருடங்கள் திருமண வாழ்கையில் இருந்த ஜோடி இவர்கள் என்பதால் ரசிகர்கள் இந்த விவாகரத்து செய்தியை கேட்டு அதிர்ந்து போயினர். 

அமலா பால்-விஜய்:

ஏ.எல் விஜய் இயக்கிய ‘தெய்வத்திருமகள்’ மற்றும் ‘தலைவா’ ஆகிய படங்களில் பணி புரிந்தவர், அமலா பால். படப்பிடிப்பின் போது நல்ல நண்பர்களாக இருந்து பின்னர் காதலர்களாக மாறிய இவர்கள், 2014ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். 2 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2016ஆம் ஆண்டில் இருவரும் இந்த உறவில் இருந்து பிரிய முடிவு எடுத்திருப்பதாக அறிவித்தனர். பின்னர், 2017ஆம் ஆண்டு பரஸ்பர விவாகரத்து பெற்றுக்கொண்டனர். 

தற்போது இயக்குநர் விஜய் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அமலா பால், மும்பையை சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்பவருடன் காதலில் இருந்தார். சில நாட்கள் டேட்டிங் செய்த பிறகு இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. 

நிஹாரிகா கொண்டேலா-சைதன்யா ஜேவி:

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய குடும்பமாக  கருதப்படும் மெகா ஸ்டார் குடும்பத்தை சேர்ந்தவர் நிஹாரிக்கா கொண்டேலா. இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் ஜெய்பூரில் மிகவும் பிரம்மாண்டமான வகையில் 2020ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இதில், பல திரையுலகை சேர்ந்த ஸ்டார் நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை 3 வருடங்களிலேயே நிறைவுற்றது. சில மாதங்களுக்கு முன்புதான் இந்த ஜோடி தாங்கள் விவாகரத்து பெற்றுக்கொண்டதாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர். 

மேலும் படிக்க | விஜய்யா? ரஜினியா? தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More